Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 நவம்பர், 2020

கடக ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 கடக ராசியின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திரனுடன் சிறிது பகை இருப்பினும், பெருந்தன்மையான குணத்தால் கடக ராசியில் குரு உச்சம் அடைகிறார். உச்சம் கொண்ட குருவினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 கம்பீரமான குரல் வளத்தை உடையவர்கள்.

🌟 எப்பொழுதும் தூய ஆடைகளை மட்டுமே அணிய விரும்பக்கூடியவர்கள்.

🌟 அதிக ஞாபக திறனும், எச்சரிக்கை உணர்வும் உடையவர்கள். 

🌟 எதிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படக்கூடியவர்கள்.

🌟 தங்களை போன்றே மற்றவர்களையும் அவ்விதம் எண்ணக்கூடியவர்கள். அவ்விதம் இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை விட்டு விலகி விடுவார்கள்.

🌟 உயர்ந்த எண்ணங்களும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையும் உடையவர்கள்.

🌟 எதிரிகளை அமைதியாக கையாண்டு அவர்களின் எதிர்ப்புகளை அடக்கக்கூடியவர்கள்.

🌟 எதிரிகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 எதையும் அளவுக்கு மீறாமல் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தந்தையின் மீது அன்பும், மரியாதையும் உடையவர்கள். 

🌟 பொது நலத்தில் சுயநலமின்றி செயல்படக்கூடியவர்கள். 

🌟 அரசியல் தொடர்புகள் மற்றும் கௌரவப் பதவிகளை உடையவர்கள்.

🌟 தெளிவான சிந்தனையும், செயல் ஞானமும் இருப்பதால் திட்டமிட்ட பணியை திட்டமிட்டவாறு செய்து முடிக்கக்கூடியவர்கள். 

🌟 உடன் இருப்பவர்களின் திறமைகளை பற்றி நன்கு அறிந்தவர்கள். காலம் வரும் போது அவர்களுக்கு தகுந்த முறையில் வழிகாட்டி அவர்களுக்கான வாய்ப்பினை அளிக்கக்கூடியவர்கள்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக