Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 நவம்பர், 2020

சமாளிபிகேஷன்... கீழே விழுந்த சட்டை... அழுவதா? சிரிப்பதா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

---------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

---------------------------------------------------

பாலு : எதுக்கு சார் இப்படி வேகமா படிக்கட்டு வழியா இறங்குறீங்க?

கிருஷ்ணன் : என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துடுச்சு சார்.

பாலு : இந்நேரம் விழுந்திருக்குமே சார்?

கிருஷ்ணன் : இன்னும் விழுந்திருக்காது சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!

பாலு : 😅😅

---------------------------------------------------

மாலா : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்குறாளே... ஏன்?

விமலா : அதுவா அவ உபயோகப்படுத்துறது சன்லைட் சோப்பாம்.

மாலா : 😎😎

---------------------------------------------------

கீழே விழுந்த சட்டை...!!!

---------------------------------------------------

ஒரு நாள் முல்லா தமது மாடியில் ஏதோ வேலையாக இருந்தார். கீழே சமையலறையில் அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். மாடியிலிருந்த முல்லா திடீரெனக் கால் தவறி கீழே விழுந்துவிட்டார்.

தடால் என்ற சத்தத்துடன் ஏதோ ஒன்று கீழே விழுந்ததை கேட்ட மனைவி திடுக்கிட்டு அது என்ன சத்தம்? என்று கேட்டாள்.

கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டவாறு ஒன்றுமில்லை... மாடியிலிருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது என்றார்.

ஒரு சட்டை விழுந்து விட்டதனாலயா அவ்வளவு பெரிய சத்தம் கேட்டது? என்று மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

சட்டைக்குள் நான் இருந்தேன் என்று கூறி முல்லா சமாளித்தார். அவர் மனைவிக்கு அழுவதா? சிரிப்பதா? என்றே தோன்றவில்லை.

---------------------------------------------------

முடிஞ்சா இத சொல்லுங்க...!!!

---------------------------------------------------

பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு.

வாழ வழியத்து பீதி அடைந்த வைத்தி சம்பாதிக்க நேர்த்தியான வழி பார்த்து, பார்த்தியிடம் தன் கதிக்கு வழி கேட்க, பார்த்தி செய்த சதியால் வைத்தி கைதியானான்.

அப்ப அப்ப வந்து வந்து சந்துல சிந்து பாடிய சிந்துவ நந்து வந்து பொந்துல இருக்குற பாம்பு எழுந்து வந்துரும் நீ வந்து கம்முனு குந்துன்னானாம்.

---------------------------------------------------

குறளும், பொருளும்...!!!

---------------------------------------------------

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள் :

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக