Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 நவம்பர், 2020

பெண்ணுறுப்பை பாதுகாக்க உள்ளாடைகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

 Ladies Western Dress Suppliers - Wholesale Manufacturers and Suppliers For  Ladies Western Dress - Fibre2Fashion

பெண்கள் தங்கள் உள்ளாடைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் ஏகப்பட்ட பெண்ணுறுப்பு தொற்றுகளை தடுக்க முடியும் என மகப்பேறியியல் மருத்துவர் விளக்கம் அளிக்கிறார். இது குறித்து அவர் பெண்கள் தங்கள் உள்ளாடைகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும், அதன் பராமரிப்பு முறைகள் மற்றும் உள்ளாடைகளை எப்போது மாற்ற வேண்டும் போன்ற ஏராளமான விளக்கங்களை இங்கே அளிக்கிறார். இதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

பெண்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தில் பல காரணிகள் பங்கு பெறுகின்றன. சுத்த பராமரிப்பு, உள்ளாடை பராமரிப்பு மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற விஷயங்கள் பங்கு பெறுகின்றன. இதில் உள்ளாடை பராமரிப்பு என்று வரும் போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. ஏனெனில் நம்மில் பெரும்பாலனோர் நல்ல கவர்ச்சியான உள்ளாடைகளை அணிகிறார்களே தவிர தரமான உள்ளாடைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை.

​உள்ளாடை

 

உள்ளாடை மீது கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இது தான் பெண்ணுறுப்பை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைக்க உதவுகிறது. பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் பெண்ணுறுப்புக்குள் நுழைவதை தடுக்கிறது. பெண்ணுறுப்பில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நமைச்சலை தடுக்கிறது.

எனவே இப்படி பாதுகாப்பு அளிக்கும் உள்ளாடைகளை நாம் எப்படி பராமரிக்க வேண்டும், அதை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என மகப்பேறியியல் மருத்துவர் நமக்கு விளக்கம் அளிக்கிறார்.

​சரியான துணியை தேர்ந்தெடுங்கள்

 

உங்களுக்கு பார்த்ததும் பிடிப்பதற்காக உள்ளாடைகளில் பிரிண்ட், லேஸ் மற்றும் சரிகைகள் கொண்டு அலங்கரித்து இருக்கலாம். ஆனால் உங்க உள்ளாடை கவர்ச்சியாக இருப்பதை விட தரமான ஒன்றாக இருக்க வேண்டும். உங்க உள்ளாடை 100% பருத்தியால் செய்யப்படவில்லை என்றால் ஈரப்பதத்தை உறிஞ்சாது. எனவே குறிப்பாக நைலான், பாலியஸ்டர் போன்ற உள்ளாடைகளுக்கு தயவு செய்து செல்லாதீர்கள். இது உங்க பெண்ணுறுப்பில் அரிப்பு, சிவத்தல் மற்றும் எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. தினமும் பருத்தி உள்ளாடைகளை மட்டுமே அணிய வலியுறுத்துகிறார் மருத்துவர். இது தான் உங்க சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கும். வியர்வையை உறிஞ்ச உதவி செய்யும்.

​தினமும் உங்க உள்ளாடைகளை மாற்றுங்கள்

 

பெரும்பாலான பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை உள்ளாடைகளை மாற்றுவதையே கஷ்டமாக உணர்கின்றனர். முடிந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உங்க உள்ளாடைகளை மாற்ற முயற்சி செய்யுங்கள். ஒருவேளை பிறப்புறுப்பு திரவ வெளியேற்றம் மற்றும் ஈரப்பதம் இருந்தால் உடனே உங்க உள்ளாடைகளை மாற்றுவது அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளாடைகளை அணிவது ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். ஒருவேளை நீங்கள் உடற்பயிற்சி செய்து வியர்க்க ஆரம்பித்தால் உடனே உள்ளாடைகளை மாற்ற முயலுங்கள்.

​இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாம்

 

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்குவது அந்த பகுதியை சுவாசிக்க வைக்கிறது. காற்றோட்டமாக வைக்கிறது. இரவில் உங்களால் நிம்மதியாக தூங்க முடியும். சிலருக்கு உள்ளாடை அணியாமல் தூங்குவது செளகரியமாக இருக்கலாம். சிலருக்கு அதில் இஷ்டம் இல்லையென்றால் காற்றோட்டமான உள்ளாடைகளை தேர்வு செய்து அணியுங்கள். இது உங்க சொந்த விருப்பத்தை பொருத்தது.

​உள்ளாடைகளை எப்படி துவைப்பது

 

உள்ளாடை மிகவும் மென்மையானது. எனவே இதை உங்க ஆடைகளை விட கவனமாக கையாள வேண்டும். முடிந்தால் உள்ளாடைகளை தனியாக துவைக்க முற்படுங்கள். ஏனெனில் உள்ளாடைகளில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இதை மற்ற ஆடைகளுடன் சேர்த்து துவைக்க வேண்டாம். எனவே உள்ளாடைகளை தனியாக துவைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உள்ளாடைகளை துவைக்க மைல்டு சோப்பு பயன்படுத்துங்கள். சூரிய ஒளியில் உலர வையுங்கள். ஏனெனில் சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் உள்ளாடைகளில் உள்ள பாக்டீரியாக்களை கொல்ல உதவும். உள்ளாடைகளை எவ்வளவு காலங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்

​மாற்ற வேண்டிய காலங்கள்

 

ஒவ்வொரு ஆண்டும் பழைய உள்ளாடைகளை மாற்றி புதிய உள்ளாடைகளை வாங்க மகப்பேறியியல் மருத்துவர் பரிந்துரைக்கிறார். ஒருவேளை துணியின் நெகிழ்வுத்தன்மை இழந்து விட்டாலோ அல்லது துர்நாற்றம் வீச ஆரம்பித்து விட்டாலோ உடனே மாற்றுவது நல்லது. எனவே எப்போதும் புதிய உள்ளாடைகளை கைவசம் வைத்து இருங்கள் என்று மகப்பேறியியல் மருத்துவர் கூறுகிறார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக