Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 நவம்பர், 2020

வகுப்பறைக்கும், ரயிலுக்கும் இதுதான் ஒற்றுமை... ரொம்ப ரோல் ஆகுதே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------

காமெடி டைம்..!!

----------------------------------------------

நர்ஸ் : நேத்து நீங்க வரலைன்னு பத்தாம் நம்பர் பேஷண்ட் உசுரை விடுறாரு டாக்டர்...

டாக்டர் : வந்திருந்தாலும் அதைத்தான் விட்டிருப்பாரு...

நர்ஸ் : 😆😆

----------------------------------------------

மனைவி : எதுக்குங்க ஒரு குடம் காபி கேட்குறீங்க..?

கணவன் : குளிக்க வெந்நீர் தா-ன்னு கேட்டா வெச்சு தருவியா..?

மனைவி : 😏😏

----------------------------------------------

மன்னன் : நமக்குதான் 100 கசையடி கொடுத்துவிட்டார்களே... அப்புறம் ஏன் அமைச்சரே, மேலும் 18 கசையடி கொடுக்கிறார்கள்?

அமைச்சர் : இது புறமுதுகுக்கான ஜி.எஸ்.டி வரியாம் மன்னா!

மன்னன் : 😩😩

----------------------------------------------

நம்பிக்கை வரிகள் !!

----------------------------------------------

வாழ்க்கையைப் பற்றி அதிகமாக யோசிக்காதீர்கள், சந்தோஷம் போய்விடும். 

ஐந்து விரல்களும் ஒரே மாதிரி அல்ல... அவைகள் வித்தியாசமானவை. அது போல் வாழ்க்கையும் ஒரே நாள் போல் அமையாது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக தான் செல்லும்.

வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணம் இருந்தாலும், வாழ்வதற்கு ஒரே காரணம், நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் தான்.

வாழ்க்கையில் நம்பிக்கை இருக்க வேண்டும், யாரையும் நம்பித்தான் இருக்கக்கூடாது.

----------------------------------------------

ரொம்ப ரோல் ஆகுதே...!!

----------------------------------------------

லோடு ரோலர்.

லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு.

----------------------------------------------

விடுகதைகள்...!!

----------------------------------------------

1. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூ பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும். அது என்ன? 

2. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார்? 

விடைகள் :

🌿 முருங்கைமரம் 

⭕ துவாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!