லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு (EPFO Pensioners) பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இப்போது உங்கள் PPO எண் தொலைந்துவிட்டால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் அதை எளிதாக மீட்டெடுக்கலாம்.
இந்த எண்ணை மீண்டும் பெற நீங்கள் எங்கும் செல்ல தேவையில்லை. உங்கள் வீட்டிலிருந்தபடியே நீங்கள் அதை மீட்டெடுக்கலாம். பணியாளர் ஓய்வு பெற்ற பிறகு, PPO எண் EPFO ஆல் வழங்கப்படுகிறது.
PPO எண் என்றால் என்ன?
PPO ஒரு தனித்துவமான எண்ணாகும். PPO எண்ணின் உதவியுடன்தான், ஓய்வூதியக்காரர்கள் பணி ஓய்விற்குப் பிறகு ஓய்வூதியம் (Pension) பெறுகிறார்கள். Provident Fund-ன் உதவியுடன் அதை நீங்கள் மீண்டும் பெறலாம்.
PPO எண்ணை எவ்வாறு பெறுவது?
-நீங்கள் முதலில் EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.epfindia.gov.in/site_en/index.php -க்கு செல்ல வேண்டும்.
-இப்போது இடது பக்கத்தில் உள்ள 'ஆன்லைன் சேவைகள்' பிரிவில் உள்ள 'Pensioners Portal’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
-கிளிக் செய்த பிறகு, ஒரு புதிய பக்கம் திறக்கும்.
-பக்கத்தின் இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'Know Your PPO No.’ என்ற ஆப்ஷனில் கிளிக் செய்யவும்.
-உங்கள் ஓய்வூதிய நிதியுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கி கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும்.
-இது தவிர, உங்கள் PF எண்ணை (உறுப்பினர் ஐடி) உள்ளிட்டு தேடலாம்.
-விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும், PPO எண் திரையில் காண்பிக்கப்படும்.
ஆயுள் சான்றிதழின் நிலையை இங்கிருந்து பெறுங்கள்
ஓய்வூதியம் பெறுவோர் இந்த இணைப்பை திறக்க வேண்டும் https://mis.epfindia.gov.in/PensionPaymentEnquiry/. ஆயுள் சான்றிதழ், கட்டணம் மற்றும் உங்கள் ஓய்வூதிய நிலை குறித்த தகவல்களை இந்த போர்ட்டலில் பெறலாம்.
PPO எண் ஏன் முக்கியம்?
PPO எண் 12 என்பது இலக்கங்களைக் கொண்ட ஒரு முக்கியமான எண்ணாகும். இது ஒரு குறிப்பு எண்ணாகும் (reference number). இது மத்திய ஓய்வூதிய கணக்கியல் அலுவலகத்துடன் செய்யப்படும் அனைத்து விதமான தகவல்தொடர்புக்கும் தேவையாக இருக்கும்.
PPO எண்ணை ஓய்வூதியதாரரின் பாஸ் புக்கில் உள்ளிட வேண்டியது அவசியமாகும். ஓய்வூதியக் கணக்கை வங்கியின் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்ற PPO எண் தேவைப்படுகிறது.
இந்த எண்ணின் உதவியுடன் நீங்கள் புகார் அளிக்கலாம்
இது தவிர, உங்கள் ஓய்வூதியம் தொடர்பான புகாரை EPFO-வில் பதிவு செய்தால், அப்போது PPO எண்ணை இங்கே கொடுக்க வேண்டியது கட்டாயமாகும். ஆன்லைன் ஓய்வூதிய நிலையை அறியவும் PPO எண் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதாழை சமர்ப்பிக்கும் போதும் PPO எண்ணை குறிப்பிட வேண்டும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக