Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 நவம்பர், 2020

மகர ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் குரு சமம் என்ற நிலையில் இருந்தாலும் அவர் நீச்சம் பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம். 

இவர்களின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்வது என்றால் மிகவும் கடினம்.

பிடிவாத குணமும், எவரிடமும் அடங்கி போகாத குணமும் இருக்கும்.

எப்போதும் தங்களை உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

தாங்கள் சொல்வதை அனைவரும் கேட்டு நடக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.

காலம் கடந்து எதையும் செய்வதால் நல்ல வாய்ப்புகளை இழந்து விடுவார்கள்.

எதிலும் நம்பிக்கையின்மையும், சந்தேகத்தையும் கொண்டவர்கள்.

வீண் செலவுகளை செய்வதில் வல்லவர்கள்.

குறைவான உறவுகள் மற்றும் நண்பர்களை உடையவர்கள்.

கற்பனையில் காலத்தை கடத்துவதில் மன்னர்கள்.

எதையும் துணிந்து செய்வதில் இவர்கள் ஈடுபடமாட்டார்கள். ஆனால், மற்றவர்கள் செய்யும் செயலில் உள்ள குறைகளை அறிவதில் வல்லவர்கள். 

எப்போதும் நிதானமாகவே இருப்பார்கள். மனதில் ஒரு விதமான கவலையுடன் இருக்கக்கூடியவர்கள்.

காது சம்பந்தமான பிரச்சனைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். 

உணவு விஷயங்களில் நல்ல சுவையறிந்து உண்ணக் கூடியவர்கள். 

நல்ல நித்திரை சுகம் உடையவர்கள்.

பெருந்தன்மையான எண்ணங்கள் இல்லாமல் குறுகிய எண்ணத்தை உடையவர்கள். 

அதீத கற்பனை திறனும், பிடிவாதமும் இவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைகின்றது.

ஆரோக்கிய சம்பந்தமான பிரச்சனைகளை உடையவர்கள்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!