Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 நவம்பர், 2020

செலவு செய்யுங்கள்... பணத்தை அல்ல... அன்பை விதைப்போம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------

தீபாவளி ஷாப்பிங்...!!

---------------------------------------------------

மனைவி : இந்தாங்க காபி... கூடவே க்ரோஸின்.

கணவன் : எதுக்கு க்ரோஸின், எனக்கு ஜுரம் இல்லையே...

மனைவி : அப்போ இந்தாங்க டைஜீன்.

கணவன் : எனக்கு வயிறு நல்லாத்தானே இருக்கு.

மனைவி : அப்படின்னா அனாஸின் சாப்பிடுங்க...

கணவன் : தலைவலி கூட இல்லையே?

மனைவி : ப்ரூபின் மாத்திரை போட்டுக்கோங்க.

கணவன் : ஏம்மா? கை கால் வலி எதுவும் இல்லையே... நல்லா தான இருக்கேன்?

மனைவி : அப்போ கிளம்புங்க... தீபாவளி ஷாப்பிங் போகணும்...

கணவன் : 😱😱

---------------------------------------------------

மணி : என் மனைவி தீபாவளிக்கு துணி எடுக்க போனா, கடிகாரம்னு ஒன்னு இருக்குறதையே மறந்துடுவா...!!

ரமணி : இது பரவாயில்லை. என் மனைவி காலண்டர்னு ஒன்னு இருப்பதையே மறந்துடுறா...!!

மணி : 😆😆

---------------------------------------------------

 

செலவு செய்யுங்கள்...!!!

---------------------------------------------------

பிடித்தவர்களை தக்க வைத்துக்கொள்ள செலவு செய்யுங்கள்...

 

பணத்தை அல்ல... 

 

உங்கள் அன்பான நேரத்தை...

 

அன்பை விதைப்போம்...

 

அன்பால் வெல்வோம்...

---------------------------------------------------

தீபாவளியும்... மாப்பிள்ளை அழைப்பும்...!!

---------------------------------------------------

தந்தைமார்களுள் ஒருவர் தனது நண்பரிடம், இந்த வருஷம் தீபாவளிக்கு மூத்த மருமகனைத் தவிர மத்த மூனு மருமகன்களையும் வீட்டு விருந்துக்கு அழைச்சுட்டேன் என்றார்.

 

அந்த நண்பர் கோபமாகி, என்ன இது?... நீ செய்யுறது உனக்கே நல்லாயிருக்கா? என்ன இருந்தாலும் அவர் உன் மூத்த மருமகன். அவருக்காக இல்லாவிட்டாலும் மகளுக்காகவாவது உன் மருமகனை நீ தீபாவளிக்கு கூப்பிட்டிருக்கணும் என்றார்.

 

அவரை ஏற, இறங்க பார்த்த பெண்ணின் தந்தை சொன்னார், மூத்த மருமகன் போன வருஷம் தீபாவளிக்கு வந்தவர். திரும்பிப்போனாத்தானே கூப்பிடுறதுக்கு...😅😅

---------------------------------------------------

இது எப்படி இருக்கு?

---------------------------------------------------

சௌத் இந்தியா-ல நார்த்தங்காய் கிடைக்கும்...

ஆனா, நார்த் இந்தியா-ல சௌத்-தங்காய் கிடைக்குமா?😉

 

Dye- னா மண்டையில போடுறது...

Die-னா மண்டைய போடுறது.😝

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக