Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 நவம்பர், 2020

இனி ரயிலில் எப்படி பயணிக்க வேண்டும்: ரயில்வே வெளியிட்ட வழிமுறை வீடியோ இதோ!

 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ரயிலில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ரயில்வே கார்டூன் வீடியோவை வெளியிட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு விதிமுறைகளோடு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 24 ஆம் தேதிமுதல் கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. பின் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில்வே நிர்வாகம் ஒப்புதல்

மாநில அரசின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தேஜஸ் சிறப்பு ரயில்கள்

சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்படும் தேஜஸ் சிறப்பு ரயில்கள் நேரம் டிசம்பர் 4 ஆம் தேதிமுதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 4 ஆம் தேதிமுதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் காலை 6 மணிக்கு புறப்படும். அதேபோல் மதுரையில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்படும். அதேபோல் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.

கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரயில்களில் பயணிப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரயில்களில் செல்லும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் கார்ட்டூன் வீடியோ ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது

ரயிலில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கொரோனா தொற்றுக்கு உள்ளாவிர்கள் எனவும் உங்களால் பிறருக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதையும் எச்சரிக்கும் விதமாக கார்ட்டூன் வீடியோ இருக்கிறது.

விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

அதோடு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டால் வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் என்பதை எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ இருக்கிறது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக