Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 நவம்பர், 2020

மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதனுடன் சுக்கிரன் நட்பு என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்

🌟 எழில்மிகு தோற்றத்தையும், பழகுவதற்கு இனிமையான சுபாவத்தையும் கொண்டவர்கள்

🌟 பெருந்தன்மையும், சாமர்த்தியமான பேச்சுகளையும் உடையவர்கள்.

🌟 தர்மம் செய்தல் மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற குணங்களை உடையவர்கள். 

🌟 ஆன்மீக எண்ணங்கள், வழிபாடுகள் ஆகியவற்றில் அதிக கவனம் உடையவர்கள்.

🌟 அறுசுவை உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள். அதுவும் தங்களின் விருப்பத்திற்கு மட்டும் அளவோடு உண்பவர்கள். 

🌟 தங்களிடம் கொடுக்கப்பட்ட வேலைகளை சரியானவர்களிடம் கொடுத்து தகுந்த காலத்திற்குள் முடித்து கொடுக்கக்கூடியவர்கள். 

🌟 பொதுச் சேவைகளில் விரும்பி ஈடுபடக்கூடியவர்கள். எதிலும் நேர்மையாக எதையும் கையாளக்கூடியவர்கள். தங்களின் செல்வாக்கு மற்றும் கீர்த்தி ஆகியவற்றிற்கு எவ்விதமான கலங்கமும் ஏற்படாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 சிறிதளவாயினும் பூர்வீக சொத்துக்களை உடையவர்கள். சமுதாயத்தில் நல்ல மதிப்புள்ள நிலையில் வாழக்கூடியவர்கள். 

🌟 அரசு சம்பந்தமான துறையில் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருக்கும். மற்றவர்களை ஏமாற்றுவதை விரும்பாதவர்கள். பணிக்கு உண்டான மரியாதையையும், கௌரவத்தையும் எந்த நிலையிலும் கடைபிடிக்கக்கூடியவர்கள். 

🌟 புத்திரர்கள் மீது மிகுந்த அன்பும் உடையவர்கள். 

🌟 அனைவருக்கும் வேறுபாடின்றி உதவக்கூடியவர்கள். சமயோகித புத்திக்கூர்மையால் எதையும் சமாளிக்கும் திறமை உடையவர்கள். 

🌟 சூழலுக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்வார்கள்.

🌟 நித்திய சுகம் உடையவர்கள். தன் விருப்பத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அமைதியாக இருந்து தனது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.



 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக