Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 நவம்பர், 2020

பயணியின் பதில்.. கடுப்பான பரிசோதகர்.. என்ன நடந்திருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

---------------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

---------------------------------------------------------

டிக்கெட் பரிசோதகர் : ஐயா, டிக்கெட் கொடுங்க...!

பயணி : முன்னாடி கண்டக்டர் நிக்கிறாரு பாருங்க, அவர்கிட்ட கேளுங்க!..

பரிசோதகர் : என்ன குசும்பா? நான் 'செக்கர்"யா, உங்க 'பயண சீட்"டை காட்டுங்க!..

பயணி : கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க!

பரிசோதகர் : (கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை காட்டி) நான் கேக்குறது இந்த டிக்கெட்டைய்யா...!

பயணி : இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொல்லிட்டாரு!..

பரிசோதகர் : என்னய்யா சொல்ற, ஏன் வேணாமுன்னு சொன்னாரு...?

பயணி : அவர்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொன்னார்... என் பேரு கூட குழந்தைதாங்க!

பரிசோதகர் : 😣😣 

---------------------------------------------------------

சிறந்த வரிகள்...!!

---------------------------------------------------------

தனிமைகள் கிடைப்பது உன்னை நீ தெரிந்துக் கொள்ள...

தவறுகள் நடப்பது உன்னை நீ திருத்திக் கொள்ள...

முயற்சிகள் எடுப்பது உன்னை நீ முன்னேற்றிக் கொள்ள...

எதிரிகள் கிடைப்பது உன்னை நீ வளர்த்துக் கொள்ள...!!

---------------------------------------------------------

வாழ்க்கை ஒரு பயணம்...

---------------------------------------------------------

நல்லதோ, கெட்டதோ நகர்ந்து கொண்டே இரு

இன்பம் வந்தால் ரசி...

துன்பம் வந்தால் சகி...

தேங்கினால் துயரம்...

வாடினால் வருத்தம்...

ஓடுவதே பொருத்தம். 

ஓடு ஓடு நதியாக...

வளைந்து நெளிந்து ஓடு...

இலக்கை நோக்கி ஓடு.

---------------------------------------------------------

இது எப்படி இருக்கு?

---------------------------------------------------------

 

மனைவி தன் கணவனை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றிருந்தாள். போகும்போது அவனிடம் தன் செல்லப் பூனையை ஒப்படைத்து, நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கேட்டு கொண்டாள். இரண்டு நாட்கள் கழித்து போனில் பூனையை பற்றி விசாரித்தாள்.

இன்னிக்கு காலையில உன் பூனை செத்துப் போச்சு என்றான் கணவன்.

அழுது புலம்பிய மனைவி எப்படி நீங்க இவ்ளோ பெரிய சோகத்தை சாதாரணமா சொல்லலாம். இன்னிக்கு பூனை மொட்டை மாடியில விளையாடுது-ன்னு சொல்லி இருக்கணும். நாளைக்கு நான் போன் பண்ணும்போது கால் தவறி பூனை மாடியிலருந்து விழுந்துடுச்சு-ன்னு சொல்லணும். அதுக்கு அடுத்த நாள் அடி பலமா பட்டதாலே பூனை செத்து போச்சு-ன்னு சொல்லணும். அப்போ தான் என்னால தாங்கிக்க முடியும் இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே?

சரி எங்க அம்மா எப்படி இருக்காங்க?

மொட்டை மாடியில விளையாடிகிட்டு இருக்காங்க... 😎😎



 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக