Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

உடற்பயிற்சி செய்வதை திடீரென நிறுத்தினால் உடலில் இத்தனை பாதிப்புகள் ஏற்படுமா?

 What Happens To Your Body When You Stop Exercising | 20 Fit

உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கு பல நன்மைகளைத் தரும் ஒரு நல்ல பழக்கமாகும். ஆனால், நீங்கள் தவறாமல் செய்யும்போது மட்டுமே உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தரும். அதை ஒரு பழக்கமாக மாற்றுவது அத்தனை எளிதான விஷயம் அல்ல. இதற்கு அதிக அளவிலான முயற்சி, உந்துதல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படும்.

உங்கள் உடற்பயிற்சி (Exercise) பயணத்தில் ஒரு தடையாக மாறக்கூடிய பல விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களாகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தற்போதைய தொற்றுநோய். COVID-19 லாக்டௌனால் பலருக்கு ஜிம்மிற்கு செல்லவோ, விளையாடுவதற்கோ அல்லது வாக்கிங், ஜாகிங் ஆகியவற்றை செய்யவோ முடியாமல் போனது.

இப்படிப்பட்ட தடைகள் ஏற்பட்டால், அதிலிருந்து நீங்கள் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவது என்பதை நீங்கள் இப்போது கண்டறிந்திருக்கலாம்.

அதே சமயம், நீங்கள் திடீரென்று உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டால், அதன் விளைவு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் எப்படி இருக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். உடற்பயிற்சியை திடீரென் விட்டுவிட்டால், நீங்கள் கவனிக்கக்கூடிய நான்கு முக்கிய மாற்றங்கள் இதோ:

1.ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கிறது

உடற்பயிற்சி செய்வது நம் இதயத்திற்கு நல்லது. ஏனெனில் இது நம் இதயம் இரத்தத்தை செலுத்தும் திறனை மேம்படுத்துகிறது. இந்த இரத்தம் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இதன் மூலம் முழு உடலிலும் ஆக்சிஜன் (Oxygen) நன்றாக பரவுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சியை செய்து, திடீரென சில வாரங்களுக்கு உடற்பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டால், ​​கூடுதல் இரத்த ஓட்டத்தை கையாள்வது இதயத்திற்கு கடினமாகி விடுகிறது. மேலும் ஆக்சிஜனை திறம்பட கையாளும் இதயத்தின் திறனும் குறைகிறது. இது மருத்துவ ரீதியாக VO2 மேக்ஸ் என அழைக்கப்படுகிறது.

2. தசை எடை இழப்பு

இது உடனடியாகத் தெரியாமல் போகலாம். ஆனால் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி அல்லது எடைப் பயிற்சியை நீங்கள் திடீரென கைவிட்டால் உங்கள் தசைகளில் (சிறிய மற்றும் பலவீனமான தசைகள்) மாற்றங்களை நீங்கள் கவனிக்கத் தொடங்குவீர்கள். உடற்பயிற்சியை கைவிட்ட பிறகு, ஒருவர் தனது சக்தியையும் சகிப்புத்தன்மையையும் பின்னர் வலிமையையும் மெல்ல இழக்கத் தொடங்குகிறார். கனமான மளிகைப் பொருட்களை தூக்கும்போதும் நீங்கள் சோர்வை உணரலாம். நீங்கள் எடையைச் சுமக்க முடியும் என்றாலும், முன்பை விட விரைவாக நீங்கள் சோர்வடையக்கூடும்.

3. அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு

நாம் உணவை உண்ணும்போது, ​​நமது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். தினசரி உடற்பயிற்சி செய்யு நபர்களது உடலில், இந்த கூடுதல் சர்க்கரை தசைகள் மற்றும் பிற திசுக்களால் உறிஞ்சப்பட்டு ஆற்றலை உருவாக்குகிறது. இருப்பினும், மக்கள் வேலை செய்வதை நிறுத்தும்போது, ​​இந்த சர்க்கரை அளவு (Sugar Level) உணவுக்குப் பிறகு உடலில் அப்படியே தங்கிவிடும். மெடிசின் & சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் & எக்சர்சைஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இளமையான ஆரோக்கியமான நபர்களில், மூன்று நாட்கள் செயலற்ற தன்மை குளுக்கோஸ் சகிப்பின்மைக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது.

4. எடை அதிகரிப்பு

நீங்கள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும்போது, ​​உங்கள் கலோரி தேவை குறைவதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உங்கள் வளர்சிதை மாற்றம் குறைகிறது. தசைகள் கொழுப்பை எரிக்கும் திறனை இழக்கின்றன. மேலும், நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது எரிக்கப்பட்ட அளவு கலோரிகள் இப்போது எரிக்கப்படாததால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக