----------------------------------------------------------------
தல தீபாவளி அலப்பறைகள்...!!
----------------------------------------------------------------
வெற்றி : தல தீபாவளிக்கு வர உங்க மாப்பிள்ளை என்ன கேட்டுருக்காரு?
வினோத் : அவருக்கு ஒரு வரவேற்பு பேனர் வைக்கணுமாம்.
வெற்றி : 😄😄
----------------------------------------------------------------
மருமகன் : என்ன மாமா இது... பாத்ரூம்ல ரெண்டு ஷவர் இருக்கு?
மாமனார் : இது தல தீபாவளி ஸ்பெஷல் மாப்ள! ஒன்னுல எண்ணெய் வரும்... இன்னொன்னுல தண்ணி வரும்...
மருமகன் : 😍😍
----------------------------------------------------------------
ராமு : தல தீபாவளிக்கு மாமனார் என்ன வாங்கி கொடுத்தார்?
சோமு : அஜித் பட ஊனு 10 வாங்கி கொடுத்து, இதான் மாப்பிள்ளை தல தீபாவளி அப்படின்னு சொல்லிட்டார்.
ராமு : 😉😉
----------------------------------------------------------------
விஜய் : நான் தீபாவளி-க்கு செய்கூலி சேதாரம் இல்லாம நகை வாங்கிட்டேன்....
அஜய் : எந்த கடைல வாங்குன?
விஜய் : என் மாமனார் வீட்ல வாங்கிட்டேன்....
அஜய் : 😅😅
----------------------------------------------------------------
பாலு : சென்னையில இருக்குற உங்க மாப்பிள்ளை தீபாவளிக்கு வரலையா...?
சோனு : இங்கே தினமும் 20 மணி நேரம் பவர்கட்னு கிளப்பிவிட்டேன்... அதான்!
பாலு : 😁😁
----------------------------------------------------------------
சிந்தனை வரிகள்...!!!
----------------------------------------------------------------
💥 என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்று யோசித்து கொண்டிருப்பதை விட ஒரு தடவையாவது முயற்சித்துப் பாருங்கள்.
கிடைத்தால் வெற்றி... இல்லையேல் அனுபவம். இரண்டுமே உங்கள் வாழ்க்கைக்கு தேவைதான்.
💥 வாழ்க்கை பின்நோக்கி இழுக்கும் போது மனம் தளராதீர்கள். பின்நோக்கி இழுக்கப்படும் அம்பு தான் வேகத்துடன் முன்நோக்கிப் பாய்கிறது.
💥 உங்களுக்கான நேரம் வரும்வரை மௌனமே சிறந்தது. காத்திருங்கள்... நீங்கள் அடையப் போகும் வெற்றி வெகு அருகாமையில்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக