Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 11 நவம்பர், 2020

பிக் பஜார்-ஐ காப்பாற்றும் ஜியோமார்ட்.. அம்பானிக்கு பெரிய மனசு தான்..!

ஜியோமார்ட் உதவி

இந்திய ரீடைல் சந்தையில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பியூச்சர் குரூப்-ன் முன்னணி ரீடைல் நிறுவனமான பிக் பஜார் தனது சப்ளையர்களுக்குப் பணம் செலுத்தாத காரணத்திற்காகவும், காலதாமதமாகச் செய்யப்பட்ட பேமெண்ட் காரணமாகவும் விற்பனைக்காகப் பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறது.

ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான 24,700 கோடி ரூபாய் மதிப்பிலான டீல் அமேசான் நிறுவனத்தின் வழக்கால் தடை பெற்று உள்ள நிலையில் பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு இந்தத் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக மிகப்பெரிய உதவியைச் செய்துள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானியின் உதவியால் பியூச்சர் குரூப்-ன் பிக் பஜார் மீண்டும் வர்த்தகச் சந்தைக்குத் திரும்பியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

முகேஷ் அம்பானி உதவி

பிக் பஜார் நீண்ட காலமாகத் தனது சப்ளையர்களுக்குப் பணம் செலுத்தாத காரணத்திற்காகவும், காலதாமதமாகச் செய்யப்பட்ட பேமெண்ட் காரணமாகவும் விற்பனைக்காகப் பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸ் ரீடைல்-ன் வர்த்தகப் பிரிவான ஜியோமார்ட் வர்த்தகத்திற்காகப் பிக் பஜார் கிளைகளுக்குப் பொருட்களை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் தீபாவளி பண்டிகைக்குப் பிக் பஜார் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

அமேசான் தடை உத்தரவு

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் இடையிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தின் (SIAC) மூலம் தற்காலிக தடை பெற்றது.

கிஷோர் பியானி வழக்கு

அமேசானின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், தடை உத்தரவை நீக்கவும், ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் ஒப்பந்தத்தில் அமேசானுக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துக் கிஷோர் பியானி உயர் கோட்டில் வழக்குத் தொடுத்துள்ளார்.

ஜியோமார்ட் உதவி

ரிலையன்ஸ் ரீடைல் - அமேசான் - பியூச்சர் குரூப் இடையில் பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ள இந்த மோசமான நிலையிலும் பிக் பஜார் நிறுவனத்திற்கு ஜியோமார்ட் செய்துள்ள இந்த உதவி முதலீட்டாளர்கள் மத்தியில் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் மீதான தடை நீங்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!