Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 நவம்பர், 2020

டிரம்புக்கு பை பை சொன்ன ஜோ பிடன்.. இந்தியாவுக்கு மீண்டும் GSP தகுதி கிடைக்குமா..?

ஜிஎஸ்பி என்றால் என்ன..?

உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா கடந்த 4 வருடமாக டிரம்ப் ஆட்சியில் தனது வர்த்தகத்தைச் சந்தையும், டாலர் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகப் பல மோசமான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தார் முன்னாள் அதிபர் டிரம்ப்.

இதன் படி அமெரிக்காவுடன் அதிக வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் பல நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது அதிகளவிலான வரியை விதித்து, வெளிநாட்டுப் பொருட்களின் வர்த்தகத்தை அமெரிக்காவில் குறைத்தார் டிரம்ப். இந்த முக்கியமான முடிவை எடுக்க முக்கியக் காரணமாக இருந்தது சீனா.

சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தகப் போராட்டத்தில் ஒரு பகுதியாக அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் அமெரிக்கா- இந்தியாவின் நட்புறவுக்கு ஆதாரமாக விளங்கிய GSP தகுதியை நீக்கினார் டிரம்ப்.

மீண்டும் கிடைக்குமா..?

இந்தியாவிற்கான சிறப்பு வர்த்தகத் தகுதியான GSP-ஐ திருப்பிக் கொடுக்க இந்திய அரசு சார்பில் பல முறை கேட்ட பின்பும் டிரம்ப் நிர்வாகம் கொடுக்க மறுத்தது. இதனிடையில் புதிய அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்று உள்ள நிலையில் இந்தியாவிற்கு மீண்டும் ஜிஎஸ்பி தகுதி கிடைக்குமான என்ற கேள்வி எழுந்தது மட்டும் அல்லாமல் இந்திய வர்த்தகச் சந்தைக்கு முக்கியமானதாகவும் விளங்குகிறது.

ஜிஎஸ்பி என்றால் என்ன..?

அமெரிக்காவின் விரும்பத்தக்க வர்த்தகத் திட்டம் தான் இந்த ஜிஎஸ்பி என அழைக்கப்படும் Generalised System of Preferences. இத்த திட்டத்தின் கீழ் தகுதி மற்றும் அனுமதி பெறும் நாடுகள் அமெரிக்காவுடன் பல ஆயிரம் பொருட்களை 0% வரியில் (duty-free entry) வர்த்தகம் செய்யலாம்.

இது அமெரிக்காவுக்கும் மட்டும் அல்லாமல் இந்தத் தகுதி பெறும் நாடுகளின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவை ஜிஎஸ்பி தகுதியில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் இந்தியா அமெரிக்காவிற்குப் போதுமான அளவிற்குத் தனது சந்தையில் வர்த்தக வாய்ப்புகள் அளிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ஹார்லி டேவிட்சன்

இதன் பின்பு இந்தியாவில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு மத்திய அரசு வட்டியை உயர்த்தியது. இதில் குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி பிரண்டான ஹார்லி டேவிட்சன் பைக் மீது மத்திய அரசு 100% வரி விதித்தது.

ஆனால் டிரம்ப்-ன் டிவீட் மற்றும் மோடிக்குச் செய்த போன் கால் மூலம் 50 சதவீத வரியைக் குறைத்தது மத்திய அரசு. இவை அனைத்திற்கும் ஆரம்பக்கட்டமாக அமைந்தது சீனா

சீனா

2019இல் அமெரிக்கா - சீனா இடையே இருந்து 308.8 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கக் கடுமையான வரி விதிப்பு, இறக்குமதி தடை ஆகியவற்றைச் சீன பொருட்கள் மீது விதித்தார். இதனால் இரு நாடுகள் மத்தியில் வர்த்தகப் போர் உருவானது மட்டும் அல்லாமல் இருநாடுகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

வர்த்தகம்

டொனால்டு டிரம்ப் சீனா மட்டுமல்லாமல் அமெரிக்காவுடன் எந்த நாடு அதிகளவிலான வர்த்தகப் பற்றாக்குறை வைத்துள்ளதோ அனைத்து நாடுகளுடனும் அதிரடியாக நடவடிக்கை எடுத்தார் டிரம்ப்.

சீனா-வை தொடர்ந்து இந்தியா பக்கம் திரும்பிய டிரம்ப், இந்தியாவிற்கான GSP தகுதியை நீக்கினார்.

28.8 பில்லியன் டாலர்

இந்தியா அமெரிக்கா இடையில் வெறும் 28.8 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறை இருந்த நிலையில், பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்கா நட்புறவின் அடையாளமாக விளங்கிய Generalised System of Preferences (GSP) தகுதியை நீக்கியது.

ஜோ பிடன்

டிரம்ப் ஆட்சியில் இந்தியாவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த இந்த ஜிஎஸ்பி பிரச்சனை இந்தியா - அமெரிக்கா நட்புறவில் பெரிய அளவிலான நம்பிக்கையை வைத்துள்ள ஜோ பிடன் ஆட்சிக்கு வந்துள்ள காரணத்தால் விரைவில் இந்தியாவிற்கு மீண்டும் ஜிஎஸ்பி தகுதி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக