Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 நவம்பர், 2020

Paytm பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கான Good News என்ன தெரியுமா... !!!

 Introducing All-in-One Paytm QR for merchants with payments at 0% fee | by  Paytm | Paytm Blog

டிஜிட்டல் கட்டணம் மற்றும் தொழில்நுட்ப தளமான பேடிஎம் கடைக்காரர்களுக்கு பெரிய நிவாரணம் அளித்துள்ளது. Paytm இன் நெட்வொர்க்குடன் இணைந்த கடைக்காரர்கள் இப்போது Paytm Wallet மற்றும் UPI மற்றும் Rupay அட்டைகள் மூலம் எந்த கட்டணமும் இன்றி, வரம்பு ஏதும் இன்றி கட்டணத்தை பெறலாம்.

Paytm வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் கட்டணம் செலுத்துவதற்கு பூஜ்ஜியக் கட்டணம் என்னும் நிவாரணம் சுமார்  1.7 கோடி வணிகர்களுக்கு பயனளிக்கும் என்று கூறியுள்ளது. கடைக்காரர்கள் தங்களின் அனைத்து டிஜிட்டல் பேமெண்டுகளிலும், பூஜ்ஜிய சதவீத கட்டணம் என்பதோடு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் டைரக்ட் செட்டில்மெண்டையும் பெற முடியும். Paytm உடன் இணைந்த கடைக்காரர்கள் இப்போது Paytm Wallet மூலம் அன்லிமிடெட் அளவில், அதாவது வரம்பு ஏதும் இல்லாமல்ல், பூஜ்ஜிய சதவீத கட்டணத்தில் பெற முடியும்.

ஒரு QR குறியீடு மட்டும் போதும்:

கடைக்காரர்கள் இனி தங்கள் கவுண்டர்களில் பல QR குறியீடுகளை வைக்க வேண்டியதில்லை. Paytm Wallet, Paytm UPI அல்லது வேறு எந்த UPI செயலியிலிருந்தும் பணம் பெற அவர்கள் 'ஆல் இன் ஒன் QR' ஐ 'All-In-One QR'  வைத்திருந்தால் போதும்.

வர்த்தகர்கள் பயனடைவார்கள்:


Paytm மூத்த துணைத் தலைவர் குமார் ஆதித்யா, 'நாங்கள் நாடு முழுவதும் எங்கள் வணிக பங்குதாரர்களை வலுப்படுத்துகிறோம். இதனால் அவர்கள் அனைத்து விதமான கட்டணங்களை பற்றிய கவலை இல்லாமல் ஏற்றுக் கொண்டு தங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வங்கிக் கணக்கில்
  செட்டில்மெண்டை பெற முடியும். இதன் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வர்த்தகர்கள் அதிகம் சேமிக்க உதவும். இப்போது வர்த்தகர்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரே க்யூஆர் மூலம் எந்த வரம்பும் இல்லாமல் செய்ய முடியும்.

போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் ஈ.எம்.ஐ:

.
Paytm சமீபத்தில் அதன் போஸ்ட்பெய்ட் சேவைகளைப் பயன்படுத்தும் நுகர்வோர் தங்கள் செலவுகளை EMI க்கு மாற்றலாம் என்று அறிவித்தது. இதனால் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல், பொருட்களை வாங்கிக் கொண்டு பின்னர் பணம் செலுத்தலாம்.இது தவிர, நுகர்வோர் Paytm வழங்கும் Buy Now மற்றும் Pay later வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக