Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 டிசம்பர், 2020

2கே டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 108 கேமராவுடன் Xiaomi Mi 11 அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

சாதனம் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மி 11 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் உடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் Xiaomi Mi 11 ஆகும்.

முதலில் இந்த சாதனம் சீனாவில் விற்பனைக்கு வரும் என்றும், விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.81-இன்ச் 2கே WQHD AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,440x3,200 பிக்சல் தீர்மானம், 1500 nits பிரைட்நஸ் வசதி, 120Hz refresh rate உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக செயல்படும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 10( MIUI 12.5 ) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சியோமி மி 11 ஸ்மார்ட்போன் HDR10+ ஆதரவு, Motion Estimation, Motion Compensation மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


இநத மி 11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார்+ 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் + 5 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 20 எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது.

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு இவற்றுள் அடக்கம்.

சியோமி மி 11 ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் மி டர்போசார்ஜ் 55W wired மற்றும் 50W wireless வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஹாரிசன் ப்ளூ, ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் மிட்நைட் கிரே போன்ற நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.

இந்திய மதிப்பில்.. சற்று உயர்வான விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மி 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.45,000-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மி 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.48,300-ஆக உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மி 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.52,800-ஆக உள்ளது. 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக