Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 டிசம்பர், 2020

"வாங்குனா NOKIA போன் தான்!" என்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ், கூடவே ஒரு பேட் நியூஸ்!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான பேட்டரி மாடல்கள் TUV ரைன்லேண்ட் சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதில் 4,500mAh பேட்டரி ஆனது மாடல் நம்பர் CN110 உடன் வருகிறது மற்றும் பெரிய 5,000mAh பேட்டரி ஆனது மாடல் நம்பர் WT340 உடன் வருகிறது.

இந்த இரண்டு பேட்டரி மாடல்களும் பாஸ்ட் சார்ஜ் செய்வதை ஆதரிக்குமா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

தற்போதைய நிலவரப்படி, நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல், நோக்கியா 6.3 / நோக்கியா 6.4 அல்லது நோக்கியா 7.3 / நோக்கியா 7.4 பற்றிய எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்களின் பெயர்களில் தெளிவில்லை.

நோக்கியா பவர் யூசர் தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "மாடல் நம்பர்களான சி.என் .110 மற்றும் டபிள்யூ.டி 340 ஆகியவைகளின் பேட்டரி மாடல்கள் டி.யூ.வி ரைன்லேண்ட் சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாடல்களும் நோக்கியா 6.3 / நோக்கியா 6.4 மற்றும் நோக்கியா 7.3 / நோக்கியா 7.4 மாடல்களுக்கானதாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.


CN110 பேட்டரி மாடல் ஆனது 4,500mAh திறன் கொண்டது, இது வதந்திக்கப்படும் நோக்கியா 6.3 அல்லது நோக்கியா 6.4 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகையில் உள்ள WT340 பேட்டரி மாடல் ஆனது 5,000mAh திறன் கொண்டதாக பட்டியலிடப்பட்டுள்ளது, இது நோக்கியா 7.3 அல்லது நோக்கியா 7.4 க்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து, வெளியான சான்றிதழ் இணையதள பட்டியல் பேட்டரிகளை பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கவில்லை."

எச்எம்டி குளோபல் இந்த ஆண்டு புதிய நோக்கியா மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இனியும் நடக்காது என்பது போல் தெரிகிறது.

நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் இந்த 2020 ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் நோக்கியா 7.3 5 ஜி மற்றும் நோக்கியா 6.3 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இந்த இரண்டு ஸ்மார்ட்டானகளும் நவம்பரில் அறிவிக்கப்படும் என்ற வதந்திகளும் இருந்தன. ஆனால் 2020ஆம் ஆண்டு முடிந்துவிட்ட நிலையில், இந்நிறுவனம் அடுத்த ஆண்டு தான் அதன் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது.


நினைவூட்டும் வண்ணம், இந்த மாதம், நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா சி 1 பிளஸ் ஆகியவை ஐரோப்பிய சந்தையில் பட்ஜெட் பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன்கள் எப்போது இந்திய சந்தைக்கு வரும் என்பதிலும் தெளிவு இல்லை.

நோக்கியா சி1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை:

நோக்கியா சி1 பிளஸ் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 1 ஜிபி + 16 ஜிபி சேமிப்பு மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ 6,200 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நீலம் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

நோக்கியா சி1 பிளஸ் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட நோக்கியா சி 1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) மூலம் இயங்குகிறது. இது 18: 9 விகிதத்துடன் 5.45 இன்ச்அளவிலான எச்டி + டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிபி டிடிஆர் 3 ரேம் உடன் 1.4GHz க்ளாக்டு வேகத்துடன் பெயரிடப்படாத குவாட் கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, பின்புறத்தில் ஒரு சென்சார் மற்றும் முன்பக்கத்தில் ஒரு சென்சார் உள்ளது. இரண்டுமே ஃபிளாஷ் ஆதரவு கொண்ட 5 மெகாபிக்சல் சென்சார்கள் ஆகும். இதன் பின்புற கேமரா எச்டிஆர் இமேஜிங்கையும் ஆதரிக்கிறது.



நோக்கியா சி 1 பிளஸ் ஸ்மார்ட்போன் 16 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இது மைக்ரோ எஸ்டி கார்டு (128 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய ஆதரவினையும் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 4 ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

நோக்கியா சி 1 பிளஸ் ஸ்மார்ட்போ ஸ்டாண்டர்ட் 5W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 2,500 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. ஆன்-போர்டில் சென்சார்களை பொறுத்தவரை, ambient light sensor, proximity sensor மற்றும் accelerometer (G-sensor) ஆகியவைகளை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் எஃப்எம் ரேடியோயும் உள்ளது. கடைசியாக நோக்கியா சி 1 பிளஸ் ஸ்மார்ட்போன் அளவீட்டில் 149.1x71.2x8.75 மிமீ 146 கிராம் எடையும் கொண்டுள்ளது.

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் விலை:

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.16,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களும் உள்ளன, அவைகளின் விலை நிர்ணயம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் Dusk மற்றும் Polar Night வண்ண விருப்பங்களில் வருகிறது.

நோக்கியா 5.4 அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 11 க்கு மேம்படுத்தக்கூடியது.

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது 6.39 இன்ச் அளவிலான எச்டி + டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC மூலம் இயக்கப்படுகிறது, இதனுடன் 6 ஜிபி ரேம் உள்ளது.


கேமராக்கள் மற்றும் வீடியோக்களுக்காக இதில் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சாருடன் வருகிறது.

ஸ்டோரேஜை பொறுத்தவரை, நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இதில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகள் உள்ளன.

பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக