அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் புக்கிங்கிள் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து போட்டியாளர்களை மிரள வைத்துள்ளது.
இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் ஐ20 கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. இந்த சூழலில், சந்தைப்போட்டியை மனதில் வைத்து புதிய தலைமுறை அம்சங்களுடன் ஹூண்டாய் ஐ20 கார் மேம்படுத்தப்பட்டது.
கடந்த மாதம் புதிய ஹூண்டாய் ஐ20 கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.6.80 லட்சம் ஆரம்ப விலையில் வந்ததால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், முற்றிலும் புதிய டிசைன் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளதால், இந்திய வாடிக்கையாளர்களை விலையில் சமரசம் செய்து புக்கிங்கை குவித்து வருகிறது.
அறிமுகம் செய்யப்பட்டு 40 நாட்களில் இதுவரை 30,000 பேர் புதிய ஐ20 காரை முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, தனது மார்க்கெட்டை மீண்டும் வலுவாக தக்க வைத்துள்ளது புதிய ஹூண்டாய் ஐ20 கார்.
அறிமுகம் செய்யப்பட்டு 40 நாட்களில் இதுவரை 30,000 பேர் புதிய ஐ20 காரை முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, தனது மார்க்கெட்டை மீண்டும் வலுவாக தக்க வைத்துள்ளது புதிய ஹூண்டாய் ஐ20 கார்.
புதிய ஹூண்டாய் ஐ20 காரின் டிசைன் அம்சங்கள் வேறு தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கூர்மையான பாகங்களுடன் கூடிய இதன் வடிவமைப்பு வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த கார் 3,995 மிமீ நீளமும், 1,775 மிமீ அகலமும,் 1,505 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,580 மிமீ ஆக உள்ளது. மேலும்,170 மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த காரில் 285 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.
புதிய ஹூண்டாய் ஐ20 காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் பனி விளக்குகள், பின்புறத்தில் எல்இடி விளக்குகள் அமைந்த பட்டை அமைப்பு ஆகியவை இதன் மதிப்பையும், வசீகரத்தையும் கூட்டுகின்றன.
உட்புறத்தில் இடவசதி மேம்பட்டுள்ளதுடன் வசதிகளும் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 50 தொழில்நுட்ப வசதிகளை அளிக்கும் புளூலிங்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், போஸ் சவுண்ட் சிஸ்டம், ஏர் பியூரிஃபயர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
புதிய ஹூண்டாய் ஐ20 காரில் 83 எச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் கப்போ பெட்ரோல் எஞ்சின், 120 எச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 100 எச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் உள்ளன.
புதிய ஹூண்டாய் ஐ20 கார் ரூ.6.80 லட்சம் முதல் ரூ.11.32 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ், டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக