இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை வரும் டிசம்பர் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று அறிவித்துள்ளது. இப்போது, அறிமுகத்திற்கு முன்னதாக, பிளிப்கார்ட் நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போனின் நம்பமுடியாத விலையை வெளிப்படுத்தியுள்ளது. மலிவு விலையில் பெஸ்டான போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாய் இருக்கும்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 ஸ்மார்ட்போன்
பிளிப்கார்ட் பட்டியலின் படி, புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 ஸ்மார்ட்போன், டிசம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை உள்நாட்டில் வெறும் ரூ .5,999 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தும் இன்பினிக்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் இந்த ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது.
Infinix Smart HD 2021 ஸ்மார்ட்போன் முழு தகவல்
புதிய Infinix Smart HD 2021 ஸ்மார்ட்போன் ப்ளூ, கிறீன் மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ண வகைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 இன் விவரக்குறிப்புகளின் முழு தகவலை இப்பொழுது பார்க்கலாம். வெறும் ரூ. 5,999 என்ற மலிவு விலையில் பெஸ்டான சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 சிறப்பம்சம்
- 6.1' இன்ச் 720x1560 பிக்சல் கொண்ட ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- 1.3GHz கிளாக்டு அறியப்படாத சிப்செட் உடன் வெளிவருகிறது
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை
- Android 10 Go இயங்குதளம்
- சதுர வடிவ ஒற்றை கேமரா அமைப்பு
- 8 மெகாபிக்சல் சென்சார்
- 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
- பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
- பேஸ் அன்லாக்
- 2 ஜி / 3 ஜி
- புளூடூத்
- வைஃபை 802.11 பி / ஜி / என்
- மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- 5W சார்ஜி
- 5,000 எம்ஏஎச் பேட்டரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக