
பிரபல வாகன நிறுவனம் ஒன்று அதன் இருசக்கர வாகனத்திற்கு விலையுயர்ந்த பொருளை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிர் காக்கும் கருவியாக தலைக் கவசம் இருக்கின்றது. எனவேதான் உலக நாடுகள் அனைத்தும் தலைக் கவசத்தை கட்டாயப்படுத்தியிருக்கின்றன. இத்தகைய ஓர் சிறப்பு பாதுகாப்பு கவசத்தையே பிரபல நிறுவனம் ஒன்று இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம், அதன் பிரபல இருசக்கர வாகனத்தின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக இந்த புதிய யுக்தியைக் கையாண்டிருக்கின்றது. அதாவது, மோஜோ 300 மோட்டார்சைக்கிளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தலைக் கவசத்தை இலவசமாக வழங்க இருப்பதாக அது அறிவித்திருக்கின்றது.
இந்த விலையுயர்ந்த தலைக்கவசம் மோஜோ பைக்கிற்கு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. ஆண்டின் முடிவை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல சூப்பர் சலுகைகளை அறிவித்து வருகின்றன. தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் இலவசம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே மஹிந்திரா நிறுவனம், ஷிரோ நிறுவனத்தின் ரூ. 4,901 மதிப்புள்ள ஹெல்மெட்டை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.
இதுதவிர, ஏற்கனவே மோஜோ பைக்கைப் பயன்படுத்தி வரும் நபர், அவரது நண்பரை (நபரை) மோஜோ பைக்கை வாங்க வைத்தார் அவருக்கு ரூ. 2,350 மதிப்புள்ள ரைடிங் குளோவ்ஸ்களை இலவசமாக வழங்க இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம், பிஎஸ்6 தரத்திலான மோஜோ பைக்கினை கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தியது.
இதன் விற்பனை சொல்லுமளவிற்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதைத் தொடர்ந்தே இதன் விலை கணிசமாக குறைக்கப்பட்டது. இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஆகஸ்டு மாதம் வரையிலாக வெறும் 146 அலகு மோஜோ பைக்குகள் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் சிறப்பு தள்ளுபடியின் மூலம் இதன் விற்பனையை ஊக்குவிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
மோஜோ 300 பைக்கில் 295சிசி திறன் கொண்ட எஞ்ஜினையே மஹிந்திரா பயன்படுத்தியுள்ளது. இது, சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 25.35 பிஎச்பி மற்றும் 26 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த பைக் இந்தியாவில் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 2.11 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக