Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 டிசம்பர், 2020

2021.. ஆங்கில வருட ராசிபலன்கள் - பாகம் 03

தர்மநெறிகளை தவறாமல் கடைபிடித்து கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே!!

ராசியின் அதிபதியான குரு ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனியுடன் இணைந்து நீச்ச பங்கம் அடைவதனால் எண்ணங்களில் அவ்வப்போது குழப்பங்களும், சோர்வும் ஏற்பட்டு நீங்கும். இளைய உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும்.

 

திருமணம் :

திருமணம் மற்றும் சுபகாரிய செயல்பாடுகளில் பெரியோர்களிடத்தில் கலந்தாலோசித்து முடிவு எடுப்பது நன்மையை அளிக்கும். உறவினர்கள் வழியில் சுபகாரியத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படுவது எதிர்பார்ப்பை நிறைவேற்றும்.

 

ஆரோக்கியம் :

தாயின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் உடல் சோர்வை குறைத்து கொள்ள முடியும்.

 

மாணவர்கள் :

அடிப்படை கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றமும், புதிய முயற்சிகளும் உண்டாகும். சிலருக்கு இடதுகை சார்ந்த பழக்கங்கள் மேம்படும். உயர்நிலை கல்வியில் முயற்சிக்கேற்ப மட்டுமே மதிப்பெண்களும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

 

உத்தியோகஸ்தர்கள் :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், பொறுப்புகளும் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்ள முடியும்.

 

வியாபாரிகள் :

வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமும், லாபமும் சிறிது காலத்திற்கு பின்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்திற்கு தேவையான கனரக வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

 

கலைஞர்கள் :

கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் எதிர்பாலின மக்களிடத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்த முடியும்.

 

அரசியல்வாதிகள் :

அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் குறையும். உங்களின் மீதான வதந்திகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் சேமிப்புகளை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

 

நன்மைகள் :

உத்தியோகம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் எதிர்பாராத மாற்றமும், நீண்டநாள் பிரச்சனைகள் நீங்கி, தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் முன்னேற்றத்துடனும் பிறக்கப் போகின்ற புதுவருடத்தில் ஏற்றம் அடைவதற்கு தனுசு ராசி அன்பர்களுக்கு நித்ரா குழுமத்தின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 

கவனம் :

நீர்நிலை சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும்.

 

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய தேவர்களின் குருவான, பிரகஸ்பதியான குரு பகவானை மஞ்சள் நிற பூக்களை கொண்டு வழிபாடு செய்து வர தேகப் பொலிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!