Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 டிசம்பர், 2020

இன்றைய கடி.. சவால் நிறைந்த புதிர்.. விடையை கண்டுபிடியுங்கள் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

------------------------------------------------------------

பாபு : ஏன் இவ்வளவு அவசர அவசரமா பெயிண்ட் அடிக்கிற?

கோபு : பெயிண்ட் தீர்ந்துபோறதுக்குள்ள அடிக்கணுமில்ல அதான்.

பாபு : 😬😬

------------------------------------------------------------

பாலு : நான் ஒரு தடவை இருபது அடி உயரமுள்ள ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்.

வேலு : ஐயோ, ரொம்பவும் அடிபட்டிருக்குமே.

பாலு : அப்படியெல்லாம் ஒன்னுமில்ல... அப்போது நான் ஏணியின் முதல் படியில்தானே இருந்தேன்.

வேலு : 😖😖

------------------------------------------------------------

இன்றைய கடி...!!

------------------------------------------------------------

நீண்டகாலம் ஒரு பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்... தன் வகுப்பில் தம் பணியின் பெருமையைப் பேசினார். மாணவர்களே! என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டராயிருக்கான்.

நல்லா படிக்காதவன் பஸ்-ல கண்டக்டராயிருக்கிறான். இதுல இருந்து என்ன தெரியுது? என்று கேட்டார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்று, 'இரண்டு பேருமே டிக்கெட் கொடுக்கிற வேலையில் இருக்காங்கன்னு தெரியுது சார்" என்றான்.😇😇😎

------------------------------------------------------------

சமையல் குறிப்புகள்...!!

------------------------------------------------------------

முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் டீ6 மற்றும் டீ12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறியை வேக வைக்கலாம்.

கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது.

------------------------------------------------------------

இந்த புதிருக்கு விடையை சொல்லுங்க...!!

------------------------------------------------------------

1) ஒரு குடும்பத்தில் மகன்களும், மகள்களும் உள்ளனர். ஒவ்வொரு மகனுக்கும் ஒரே எண்ணிக்கையில் சகோதரர்களும், சகோதரிகளும் உள்ளனர். ஒவ்வொரு மகளுக்கும் சகோதரிகளைப் போன்று சகோதரர்கள் இரு மடங்கு உள்ளனர். அந்தக் குடும்பத்தில் எத்தனை மகன்கள், எத்தனை மகள்கள் இருக்கின்றனர்?

2) கடிகாரத்தில் உள்ள சிறிய முள்ளும், பெரிய முள்ளும் ஒருநாள் நள்ளிரவுக்கும், மறுநாள் நள்ளிரவுக்கும் இடையே எத்தனை முறை ஒன்றையொன்று கடந்து செல்கின்றன?

3) மாலாவுக்கு வயது 13. அவள் தந்தையின் வயது 40. எத்தனை ஆண்டுகளுக்குமுன் தந்தையின் வயது மாலாவின் வயதில் நான்கு மடங்காக இருந்தது?

விடை:

1. 4 மகன்கள், 2 மகள்கள்

2. 23 முறை

3. 4 ஆண்டுகளுக்கு முன்

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக