Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 டிசம்பர், 2020

கன்னி ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

👉 கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். புதனுடன் சுக்கிரன் நட்பு என்ற நிலையில் இருந்தாலும் அவர் நீசம் என்னும் நிலையை அடைந்து பலம் இழக்கிறார். பலம் இழந்த சுக்கிரன் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

👉 தடைபட்ட கல்வியும், குறைந்த அளவில் ஞானமும் உடையவர்கள். 

👉 எவரிடத்திலும் சிந்தித்தே வாக்கு கொடுக்கக்கூடியவர்கள்.

👉 அனைவரையும் இனிமையான பேச்சுகள் மூலம் வசீகரிக்கக்கூடியவர்கள்.

👉 வாய்ஜாலம் உடையவர்கள். செய்தொழிலில் எச்சரிக்கையையும், நிர்வாகத்திறமையையும் உடையவர்கள்.

👉 நாணயமானவர்கள். கொடுக்கல் - வாங்கலில் நேர்மை தவறாதவர்கள்.

👉 தங்களை ஏமாற்றுவது போல் இருந்தால் அவர்களின் சகவாசத்தை அறவே வெறுக்கக்கூடியவர்கள்.

👉 குடும்ப தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாதவர்கள்.

👉 வீடு மற்றும் வாகனங்களை தங்களின் இரசனைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

👉 எதிர்பாராத தனவரவு அவ்வப்போது கிடைக்கும். இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளின் மீது அலாதி பிரியம் உடையவர்கள்.

👉 வாசனைத் திரவியங்கள் மற்றும் அலங்கார பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள். 

👉 தந்தையின் மீது அன்பும், மரியாதையும் உடையவர்கள். தந்தை வழி உறவுகளால் ஆதரவும், வழிகாட்டுதலும் உண்டாகும்.

👉 திருத்தல பணிகள் மற்றும் ஞானப் பயிற்சியும் உடையவர்கள். புராண இதிகாசங்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

👉 சுயநலமில்லாமல் பொது நலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக