Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 25 டிசம்பர், 2020

2021.. ஆங்கில வருட ராசிபலன்கள் - பாகம் 10

சவாலான காரியங்களையும் சாதித்துக் காட்டும் வல்லவர்களான மீன ராசி அன்பர்களே...!!

எண்ணிய காரியத்தை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீடு, மனை மற்றும் வாகனம் மூலம் பொருட்சேர்க்கையும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். பயணங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

பொருளாதாரம் :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவினால் படிப்படியாக பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்கள் மற்றும் உயர்பதவியில் இருப்பவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

 

ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். பார்வை தொடர்பான இன்னல்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். உணவு சார்ந்த விஷயங்களில் அக்கறை செலுத்துவது நன்மையளிக்கும்.

 

திருமணம் :

மகன் அல்லது மகளுக்கு திருமணம் தொடர்பான வரன்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மூலம் மகிழ்ச்சி ஏற்படும். மனதிற்கு பிடித்த விதத்தில் மகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.

 

மாணவர்கள் :

மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் நீங்கி நினைவாற்றல் மேலோங்கும். புதிய நண்பர்கள் மூலமாக அனுபவமும், நுட்பமும் மேம்படும்.

 

உத்தியோகஸ்தர்கள் :

உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் நிறைவேறும். பதவிகளும், பொறுப்புகளும் உங்களை தேடி வரும். பகுதிநேர வேலைவாய்ப்புகளின் மூலம் சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். பணிகளில் எதிர்பார்த்திருந்த சம்பளமும், சிறுசிறு சலுகைகளும் கிடைக்கும்.

 

வியாபாரிகள் :

வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்த நிர்வாகத்தில் சிற்சில மாற்றங்களை செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த கடன்களை சிறுசிறு தொகையாக அடைப்பதற்கான முயற்சிகளும் உண்டாகும்.

 

கலைஞர்கள் :

கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகளும், சூழ்நிலைகளும், பெரியோர்களின் ஆசிகளும் கிடைக்கும்.

 

அரசியல்வாதிகள் :

அரசியல் மற்றும் சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆளுமைத்திறன் அதிகரிக்கும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து வாக்குறுதிகளை கொடுப்பது நல்லது. கட்சி தொடர்பான பணிகளில் தேவையற்ற விஷயங்களை பேசுவதை குறைத்து கொள்ளவும்.

 

நன்மை :

புதிய முயற்சிகளில், நுட்பமான சிந்தனைகளை புகுத்தி, எதிர்பார்த்த உதவிகள் மற்றும் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றத்தை அமைத்துக்கொள்ள இருக்கக்கூடிய மீன ராசி அன்பர்களுக்கு நித்ரா குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்.

 

கவனம் :

விதண்டாவாத சிந்தனைகளை தவிர்த்து உண்மை நிலையுடன் பொறுமையாக செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும்.

 

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் சிவபெருமானை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!