Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 25 டிசம்பர், 2020

மாயச்சதுரம்... எந்த வரிசையில் கூட்டினாலும் ஆறு வர வேண்டும். எப்படி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------

கொஞ்சம் சிரிங்க பாஸ்.....!

------------------------------------------------

மனைவி : என்னங்க.. எவனோ கிச்சன்- புகுந்து நான் பண்ணி வெச்சுருந்த கேக்கை தின்னுட்டான்.

கணவர் : இப்ப யாருக்கு ஃபோன் பண்ணனும்.. போலீசுக்கா? இல்ல ஆம்புலன்சுக்கா

மனைவி : 😏😏

--------------------------------------------------

வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்காரு...

பாலு : ஏன்?

வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம்...

பாலு : 😛😛

--------------------------------------------------

குறளும், பொருளும்...!

--------------------------------------------------

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

பொருள் :

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

--------------------------------------------------

மாயச்சதுரம்...!!

--------------------------------------------------

ஒன்று, இரண்டு, மூன்று இவற்றை மட்டும் பயன்படுத்தி எந்த வரிசையில் கூட்டினாலும் ஆறு வர வேண்டும். எப்படி?

விடை கீழே...👇

--------------------------------------------------

அட அப்படியா?

--------------------------------------------------

மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.

கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.

ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்.

பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது.

உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.

எறும்புகள் தூங்குவதே இல்லை.

--------------------------------------------------

புதிருக்கான விடை :

--------------------------------------------------

312123231

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக