🌟 கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் சுக்கிரன் நட்பு என்னும் நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்கள் பற்றி காண்போம்.
🌟 மனை வசதியும், வாகன வசதியும் உடையவர்கள்.
🌟 சிறந்த வேலையாட்களை கொண்டு தொழில் புரியும் திறமை உடையவர்கள்.
🌟 தாய், தந்தையின் மீது அன்பு கொண்டவர்கள்.
🌟 தந்தை வழி ஆதரவும், வழிகாட்டுதலும் உடையவர்கள்.
🌟 கால்நடைகளால் இலாபம் அடையக்கூடியவர்கள்.
🌟 நல்ல நீர்வசதி கொண்ட இருப்பிடத்தில் வசிக்கக்கூடியவர்கள்.
🌟 ஆடை அலங்காரத்திலும், வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதிலும் விருப்பம் உடையவர்கள்.
🌟 எதிலும் கலை ரசனையான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 சுகபோகமே இவர்களின் விருப்பமாகும்.
🌟 திடீர் அதிர்ஷ்டத்தால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
🌟 பிறருடைய சொத்துக்கள் இவர்களை வந்து சேரும்.
🌟 திருத்தல பணிகளை செய்வதில் அதிக விருப்பம் உடையவர்கள்.
🌟 கௌரவ பதவிகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று செய்யக்கூடியவர்கள்.
🌟 பிறரை ஏமாற்றும் எண்ணம் இல்லாதவர்கள். ஆனால், தன்னை ஏமாற்றுபவர்களை நேரம் பார்த்து பதிலடி கொடுக்கக்கூடியவர்கள்.
🌟 எதையும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 பிறரின் பாராட்டுக்களை விரும்பக்கூடியவர்கள். ஆனால், எதிலும் அளவுடனும், எச்சரிக்கையுடனும் இருக்கக்கூடியவர்கள்.
🌟 பாரம்பரிய செயல்பாடுகளை விரும்பி செய்யக்கூடியவர்கள்.
🌟 எந்த செயலையும் நன்கு ஆலோசித்து பின்பு செய்யக்கூடியவர்கள்.
🌟 இவர்களது எண்ணங்களை புரிந்துக்கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல.
🌟 ஆன்மீகம் சார்ந்த துறைகளில் நல்ல ஞானம் உடையவர்கள்.
🌟 நம்பிக்கையும், விசுவாச குணமும் உடையவர்கள்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக