வாட்ஸ்அப் நிறுவனத்தின் போட்டியாளரும், பிரபல மறைகுறியாக்கப்பட்ட மெசேஜிங் செயலியுமான டெலிகிராம் வருகிற 2021 ஆம் ஆண்டில் கட்டண சேவைகளை தொடங்க உள்ளது.
டெலிகிராம் ஆப் நிறுவனம், 500 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை
நெருங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் வருகிற 2021 ஆம் ஆண்டுடில் டெலிகிராம் ஆப் அதன்
கட்டண சேவைகளைத் தொடங்கும் என்றும் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விளக்கத்தில், "வளர்ந்து வரும் நிறுவனத்திற்கு வருடத்திற்கு குறைந்தது
சில நூறு மில்லியன் டாலர்களாவது தேவைப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடங்கி டெலிகிராம் சேவையை பணமாக்குவது குறித்து பாவெல் துரோவ் இரண்டு-கட்ட
திட்டத்தை வகுத்தார்.
இந்த திட்டத்தின் முதல்கட்ட பகுதியில், பிஸ்னஸ் அல்லது பவர் யூஸர்களுக்கான பிரீமியம்
அம்சங்களை அறிமுகப்படுத்தப்படும். டெலிகிராம் ஆப்பில் தற்போதுள்ள அனைத்து அம்சங்களும்
தொடர்ந்து இலவசமாக இருக்கும் அதே வேளையில், இந்த சேவையில் சில புதிய அம்சங்கள் அறிமுகம்
செய்யப்படும்.
இரண்டாம் கட்ட பகுதியில், பப்ளிக் சேனல்களில் விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த சேனல்கள் ஒரு தனிநபர் அல்லது ஒரு குழுவினரால் நடத்தப்படும் பெரிய அளவிலான ஓப்பன்
க்ரூப் சாட்களைப் போன்றவை, அதாவது இது யாரையும் இணைய அனுமதிக்கும்.
பல ஆண்டுகளாக, இவ்வகை க்ரூப்களின் புகழ் அதிக அளவில் உயர்ந்துள்ளது, பயனர்கள் அவற்றை
நவீன மன்றங்களாக அல்லது அதற்கு மாற்றாக கருதுகின்றனர்.
டெலிகிராம் இந்த க்ரூப்களில் தங்கள் சொந்த விளம்பர நெட்வொர்க்கைப் பயன்படுத்தி விளம்பரங்களைக்
காண்பிக்கும், இது க்ரூப் உரிமையாளர்களால் கைமுறையாக போஸ்ட் செய்யப்படும் விளம்பரங்களுக்கு
இனி வேலை இருக்காது.
நிறுவனத்தின் மூலமாக காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்கள் ஆனது ஆப் உடன் ஒருங்கிணைக்கப்படும்
மற்றும் போஸ்ட்களாக வெளியிடப்படாமல் மாறாக சிறந்த இன்டர்பேஸைக் கொண்டிருக்கும். ஒன்
ஆன் ஒன் மற்றும் ப்ரைவேட் க்ரூப்களை பொறுத்தவரை, அவைகளில் எந்த விளம்பரங்களும் இல்லாமல்
இருக்கும்.
பாவெல் துரோவ் வெளியிட்டுள்ள பதிவில், டெலிகிராம் ஒரு சுயாதீன நிறுவனமாக இருக்கும்
என்று அவர் பயனர்களுக்கு உறுதியளித்தார். மேலும் கட்டண சேவைகள் சார்ந்த நடவடிக்கைகள்
நிறுவனத்தை தொடர்ந்து இயங்க அனுமதிக்கும் மற்றும் பணத்திற்காக விற்கப்படாமல் இருக்கும்
என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
தனது சொற்களை ஒருபோதும் குறைவாக எண்ண வேண்டாம் என்று கூறியதோடு அவர் பேஸ்புக்கிற்கு
விலைபோன வாட்ஸ்அப் நிறுவனத்தையும் சுட்டிக்காட்டினார். ஒரு தளத்தின் உரிமையாளர்கள்,
பயனர்களின் தனியுரிமைக்கு பதிலாக இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது விஷயங்கள்
எவ்வாறு மோசமாகும் என்பதற்கான எடுத்துக்காட்டாக வாட்ஸ்அப்பை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக