நாம் பார்க்கவிருக்கும் வாகனத்தை மாருதி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவந்து நான்கு வருஷம் ஆயிருச்சாம். இதுகுறித்த சிறப்பு தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான வர்த்த வாகனங்களில் சூப்பர் கேரி மாடலும் ஒன்று. இந்த வாகனத்தை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தி நான்கு ஆண்டுகளாவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் கேரி ஓர் மினி லோட் (light commercial vehicle) வாகனமாகும்.
இதனை மாருதி நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்ட அந்த நாளிலிருந்து தற்போது வரை சுமார் 70 ஆயிரத்திற்கும் சூப்பர் கேரி வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் குறைந்த விலை மற்றும் அதிக உழைப்பு திறன் உள்ளிட்டவையே இந்தியர்கள் மத்தியில் நற்மதிப்பைப் பெற காரணமாக இருக்கின்றது. எனவேதான் இதனை வெற்றிகரமான மாடலாக மாருதி பார்க்கத் தொடங்கியுள்ளது. இதற்கேற்பவே வர்த்தக பயன்பாட்டிற்காக வாகனங்களை தேடுவோர் மத்தியில் சுசுகி சூப்பர் கேரி-க்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.
இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் கடந்த 2019-20 ஆண்டில் 15 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இதேபோன்று, 2020-2021ல் கிட்டதட்ட 20 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றது. தொடர்ந்து இதேமாதிரியான விற்பனை வளர்ச்சியையேப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாருதி நிறுவனம் சூப்பர் கேரி லோடு வண்டியின் விலையை அண்மையில்தான் உயர்த்தியது. ரூ. 18 ஆயிரம் இதன் விலை உயர்த்தப்பட்டது. ஆகையால், இப்போது இதன் விலை ரூ. 4.25 லட்சமாக மாறியிருக்கின்றது. இதன் உச்சபட்ச விலை ரூ. 5.18 லட்சம் ஆகும். இது பிஎஸ்6 உமிழ்வு தரத்தில் மட்டுமின்றி எஸ்-சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
மாருதி சுசுகி சூப்பர் கேரி வேனில் 4 சிலிண்டர் கொண்ட எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 64 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 85 என்எம் டார்க்கை 3,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இதில் சிறப்பு வசதிகளாக பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், லாக்கபிள் குளோவ் பாக்ஸ், மிகப்பெரிய லோட் பகுதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக