Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 28 டிசம்பர், 2020

2021.. ஆங்கில வருட ராசிபலன்கள் - பாகம் 12

சிந்தனையும், தெளிவான மனமும் கொண்டு அனைவரிடமும் காரியங்களை சாதித்து கொள்ளும் துலாம் ராசி அன்பர்களே..!!

இதமான பேச்சுக்களின் மூலம் இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த வழக்கு தொடர்பான பிரச்சனைகளை முடித்து கொள்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனையில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும்.

 

திருமணம் :

 

எதிர்பார்த்திருந்த திருமண வரன்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும். காதல் தொடர்பான விவகாரங்களில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். திருமணம் ஆகாமல் இருந்த சகோதர, சகோதரிகளுக்கு திருமணத்திற்கான வாய்ப்புகள் அமையும்.

 

ஆரோக்கியம் :

 

தலை சுற்றல், கால்வலி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். பயணங்களின் மூலம் உடலில் அலைச்சலும், சோர்வும் ஏற்பட்ட வண்ணமாக இருக்கும். வாகனப் பயணங்களில் பொறுமையுடன் செல்ல வேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

 

உத்தியோகஸ்தர்கள் :

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் தூக்கமின்மையும், அலைச்சலும் ஏற்படும். ஆகவே, பணிகளை உரிய நேரத்தில் நிறைவாக முடிப்பதன் மூலம் திருப்தியும், ஆரோக்கியமும் மேம்படும்.

 

மாணவர்கள் :

 

மாணவர்களுக்கு அடிப்படை கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். கணிதம் மற்றும் அந்நிய மொழிகளில் சற்று கவனத்துடன் பாடங்களை கற்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

 

வியாபாரிகள் :

 

வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.

 

அரசியல்வாதிகள் :

 

அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகளும், உயர் பதவிகளும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பயணம் தொடர்பான எண்ணங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும்.

 

கலைஞர்கள் :

 

கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உண்டான அங்கீகாரம் சற்று காலதாமதமாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த வாய்ப்புகள் மற்றும் படைப்புகள் வெளிப்பட்டு அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.

 

நன்மைகள் :

 

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகளின் மூலம் தொழிலில் முன்னேற்றத்தை உருவாக்கி கொள்ளக்கூடிய துலாம் ராசி அன்பர்களுக்கு நித்ரா குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்.

 

கவனம் :

 

மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வதும், தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதும் உடலுக்கும், மனதுக்கும் நன்மையளிக்கும்.

 

வழிபாடு :

 

நீர் நிலையின் அருகில் உள்ள வராஹி அம்மனை திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வர தொழில் நிமிர்த்தமாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக