------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!
----------------------------------------------
கஸ்டமர் : என்னப்பா.. இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரியே இருக்கு?
வெயிட்டர் : இது அதோட ஓநுசுழுஓ காபி சார்.
கஸ்டமர் : 😣😣
----------------------------------------------
அமலா : படத்தின் முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்.
விமலா : யார் வில்லனா? கதாநாயகனா?
அமலா : இல்ல தயாரிப்பாளர்.
விமலா : 😄😄
----------------------------------------------
குட்டிக்கதை... இது சிரிப்பதற்கு மட்டுமே...!
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. அதற்கு மூன்றுபேர் வந்திருந்தனர்.
முதலாவது நபர் உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. 'இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?" என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. அவர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார். 'அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.
அதிகாரிக்கு கோபம் வந்துவிட்டது. 'இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவு பண்ணலாம்?" என்று எரிச்சலுடன் திட்டிவிட்டு, அடுத்தவரை அழைத்தார்.
அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!
'ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!" என்றார் இரண்டாம் நபர். அதிகாரி தன் தலையில் தானே கொட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.
மூன்றாவது நபர் வந்தார். அவரிடமும் அதே கேள்வி, அதே புகைப்படம் காட்டப்பட்டது. அவர் கேள்வியையும், புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், 'அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!" என்றார்.
அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ? என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!
'என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?" என்று கேட்டார் அதிகாரி.
அதற்கு மூன்றாவது நபர் சொன்னார். 'இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!"😎😇
----------------------------------------------
வார்த்தை விளையாட்டு...!!
----------------------------------------------
1. டு த் கு ம் ன தி ர் ப
2. கோ தி ல் ற வு
3. ட் பு ப் டு ம் நா ர
விடை :
1. குடும்பத்தினர்
2. திறவுகோல்
3. நாட்டுப்புரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக