ஹைசென்ஸ் தனது டொர்னாடோ 4கே சீரிஸ் ஸ்மார்ட்டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த தொடரில் இரண்டு அளவுகளில் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகமாக உள்ளது.
ஹைசென்ஸ் டொர்னாடோ 4கே ஸ்மார்ட்டிவி
ஹைசென்ஸ் டொர்னாடோ 4கே தொடர் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடரில் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என்ற இரண்டு அளவுகளில் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியின் 55 இன்ச் வேரியண்ட் ஆனது டிசம்பர் 24, 2020 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் 65 இன்ச் வேரியண்ட் ஆனது 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆறு ஸ்பீக்கர்கள் இணைப்பு
ஜேபிஎல் மூலம் இயக்கப்படும் ஆறு ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்டிவியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஸ்பீக்கர்கள் 102 வாட்ஸ் வரை ஒலி வெளியீட்டை வழங்கும் என கூறப்படுகிறது. இதில் டால்பி ஆட்மாஸ் ஆதரவும் இருக்கிறது.
அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து செல்லும் அனுபவம்
ஹைசென்ஸ் டொர்னாடோ 4கே ஸ்மார்ட்டிவிகள் டால்பை விஷன் எச்டிஆர் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதில் முழு டிஸ்ப்ளே அல்ட்ரா டிம் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவிகளானது பார்க்கும் அணுபவத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 9.0 பை ஆதரவு
ஹைசென்ஸ் டொர்னாடோ 4கே ஸ்மார்ட்டிவி தொடரானது ஆண்ட்ராய்டு 9.0 பை மூலம் இயக்கப்படுகிறது. இதில் உள்ளமைக்கப்பட்ட கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் கூகுள் க்ரோம் ஆதரவு இருக்கிறது. இதில் ப்ளே ஸ்டோர் மூலம் கிடைக்கும் 5000-த்துக்கும் மேம்பட்ட பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
கூடுதல் ஆடியோ சாதனங்கள் தேவைப்படுகிறது
ஹைசென்ஸ் டொர்னாடோ 4கே ஸ்மார்ட்டிவி அறிமுகம் குறித்து ஹைசென்ஸ் இந்திய சிஇஓ ரிஷி டாண்டன் கூறிய கருத்து குறித்து பார்க்கையில், தெளிவான ஒலித் தரம் , எல்இடி தொலைக்காட்சி அனுபவம் இல்லாமல் இந்தியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் தெளிவான ஆடியா அனுபவத்திற்கு கூடுதல் ஆடியோ சாதனங்கள் இணைக்க வேண்டிய நிலை உள்ளது எனவும் கூறினார்.
ஸ்டைலான வடிவமைப்பு, சக்திவாய்ந்த ஒலி அனுபவம்
இதன்காரணமாக இந்திய சந்தையை திருப்திப்படுத்த டொர்னாடோ 4கே சீரிஸ் ஸ்மார்ட்டிவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். இந்த தொடர் ஸ்மார்ட்டிவி ஸ்டைலான வடிவமைப்பு, சக்திவாய்ந்த ஒலி என அனைத்தையும் முழுமையாக வழங்கும் என கூறினார். எதிர்பார்க்க முடியாத ஒலி அனுபவத்தை வழங்க இதில் 6 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக