Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 16 டிசம்பர், 2020

ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி!


ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி!

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கமலக்கண்ணன் (Minister kamalakannan) கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. ஜனவரி 4 ஆம் தேதியில் இருந்து காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். விருப்பப்படும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். ஜனவரி 18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த (Schools Reopening) முடிவு செய்யப்பட்டுருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரியில் (Puducherry) கல்லூரிகளை திறப்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அம்மாநிலத்தில் ஏற்கனவே 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது நினைவு கூரத்தக்கது. 

புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் 9 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது. 


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!