Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 25 டிசம்பர், 2020

மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் சுற்றுலா பயணிகள் செய்த காரியம்... 7 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...

மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் சுற்றுலா பயணிகள் செய்த காரியம்... 7 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...

பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட அடல் சுரங்கப்பாதையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக 7 சுற்றுலா பயணிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடல் சுரங்கப்பாதையை (Atal Tunnel) திறந்து வைத்தார். அடல் சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட உடனே, அதன் அழகிய சுற்றுப்புறத்தை ரசிப்பதற்காகவும், போட்டோ மற்றும் வீடியோக்களை எடுப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர்.

இந்த சூழலில் சுற்றுலா பயணிகள் சிலர் அடல் சுரங்கப்பாதையின் நடுவே சமீபத்தில் வாகனங்களை நிறுத்தி நடனம் ஆடியுள்ளனர். அத்துடன் போட்டோ மற்றும் வீடியோக்களையும் எடுத்துள்ளனர். அவர்களின் செயல் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தியதால், ஹிமாச்சல பிரதேச காவல் துறையினர் 7 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடல் சுரங்கப்பாதைக்கு உள்ளே சுற்றுலா பயணிகள் நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்கள் ஹிமாச்சல பிரதேச காவல் துறையினருக்கும் சென்ற நிலையில் அவர்கள் விசாரணையை தொடங்கினர். இது போக்குவரத்து முக்கியத்துவம் மிகுந்த சாலை என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தொடங்கி விட்டனர்.

சுரங்கப்பாதையின் நடுவே சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களை நிறுத்தியதுடன் மட்டுமல்லாது, வாகனங்களில் பாடல்களை ஒலிக்க விட்டு நடனமும் ஆடியுள்ளனர். இதன் காரணமாக சுரங்கப்பாதையின் உள்ளே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் சிலரின் நடவடிக்கையால் மற்ற பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே மேலும் பலர் அதிரடியாக கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடல் சுரங்கப்பாதைக்கு உள்ளே வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வாகனங்களை நிறுத்துவது சட்ட விரோதமானது.

ஆனால் சுற்றுலா பயணிகள் பலர் செல்பி எடுக்கவும், வீடியோக்களை எடுக்கவும் அடல் சுரங்கப்பாதையின் உள்ளே வாகனங்களை நிறுத்தி கொண்டுதான் இருக்கின்றனர். இத்தகைய செயல்பாடுகள் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சுற்றுலா பயணிகள் உணர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக அடல் சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அரசு அதிகாரிகள் அனுமதியளித்த உடனேயே அதன் உள்ளே ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பயணம் செய்ததாலும், மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்ய முயற்சி செய்ததாலும்தான் அங்கு ஏராளமான விபத்துக்கள் நடைபெற்றன.

எனவே அடல் சுரங்கப்பாதையில் வேக வரம்பை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் தற்போது அபராதம் விதித்து வருகின்றனர். அத்துடன் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை தடுப்பதற்காக, காவல் துறையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அடல் சுரங்கப்பாதையில் ரோந்து சென்று விதிமீறல்களை கண்காணித்து வருகின்றனர்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக