ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி லாக்டவுன் காலத்தில் மிகப்பெரிய கனவுடன் துவங்கிய ஈகாமர்ஸ் வர்த்தகப் பிரிவான ஜியோமார்ட் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை அடைந்து பெருமளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
ஜியோமார்ட் மிகவும் குறைந்த காலகட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியா முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இதன் படி ஜியோமார்ட் தளத்தில் தினமும் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் அளவில் உயர்ந்துள்ளது.
அதிக வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் சேவை நிறுவனங்கள் குறித்து ஜேபி மோர்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி ஆக்டீவ் யூசர்ஸ் அடிப்படையில் ஜியோமார்ட் இத்துறையில் முன்னோடியாக இருக்கும் பிக் பேஸ்கட் மற்றும் க்ரோபர்ஸ் ஆகிய நிறுவனங்களை முந்திவிட்டது எனத் தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஜியோமார்ட்-க்கு முன் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக் பேஸ்கட் மற்றும் க்ரோபர்ஸ்
பிக் பேஸ்கட் 2011லும், க்ரோபர்ஸ் 2013லும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 34 மில்லியன் மற்றும் 30 மில்லியன் முறை ஆப் டவுன்லோடு செய்யப்பட்ட நிலையிலும், வெரும் 6 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோமார்ட் அதிக வாடிக்கையாளர்களைத் தனது தளத்தில் தினமும் ஷாப்பிங் செய்யத் தூண்டியுள்ளது.
ஜியோமார்ட் கலக்கல்
மே மாதத்தில் இருந்து இந்திய ஆப் டவுன்லோடு சந்தையில், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக டவுன்லோடு செய்யப்படும் ஆப்களில் 70 சதவீதம் ஆப் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோமார்ட் செயலி என ஜேபி மோர்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல நிறுவனங்கள் ஆதிக்கம்
ஜியோமார்ட் அறிமுகம் செய்யப்பட்ட போது இந்திய ஈகாமர்ஸ் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்தது. இதில் குறிப்பாகப் பிளிப்கார்ட், அமேசான், பிக்பேஸ்கட், க்ரோபர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தக் கடுமையான போட்டி மிகுந்த சூழ்நிலையிலும் ஜியோமார்ட் பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது.
வர்த்தக முறை
ஜியோமார்ட் இந்தியாவில் இதுவரை யாரும் செய்திடாத வகையில் சுமார் 200க்கும் அதிகமான நகரங்களில் தனது வரத்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. ஜியோமார்ட் தனது வர்த்தகத்தை நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் கூட்டணி மளிகைக் கடைகளுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கும் காரணத்தால் குறைந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக