Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 25 டிசம்பர், 2020

அலிபாபா மீது சீன அரசு அமைப்பு வழக்கு.. வசமாக மாட்டிக்கொண்டது..!

 சீன அரசு அதிகாரிகள்


சீனாவில் வேகமாக வளர்ந்து வரும் அலிபாபா நிறுவனத்தின் ஆன்ட் குரூப் ஐபிஓ-வை சீன அரசு தடை செய்த நிலையில், அலிபாபா தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அலிபாபா ஆன்ட் குரூப் நிறுவனத்தை அடுத்த 2 வருடத்திற்குப் பங்குச்சந்தையில் பட்டியலிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனா அரசு அலிபாபா மீது மோனோபோலி செயல்பட முயற்சி செய்வதாக வழக்குத் தொடுத்துள்ளது. இதற்கான விசாரணை சீன அரசு அலிபாபா நிர்வாகத்திடம், அதன் வர்த்தக முறை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. 

என்ன பிரச்சனை

சீன சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்கனவே அலிபாபா நிறுவனத்தை "choosing one from two" முறையைக் கடைப்பிடிக்கக் கூடாது எனப் பல முறை எச்சரித்துள்ளது. ஆனாலும் அலிபாபா விற்பனையாளர்களிடம் தனது சேவையைப் பயன்படுத்துவோர் மற்ற நிறுவன பேமெண்ட் சேவைகளைப் பயன்படுத்தக் கூடாது என ஒப்பந்தம் செய்து வருகிறது.

இதை எதிர்த்து சீனாவின் அரசு சந்தை கட்டுப்பாடு நிர்வாக அமைப்பு (SAMR) அமைப்பு வழக்குத் தொடுத்துள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அலிபாபாவிற்குச் செக்

இதைத்தொடர்ந்து அலிபாபாவின் ஆன்ட் குரூப் நிறுவனத்திடம் நிதியியல் துறை கட்டுப்பாட்டு ஆணையம் அடுத்த சில நாட்களில் நேரடியாக விசாரணை செய்ய உள்ளதாகச் சீனாவின் மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்விரு அரசு அமைப்புகளின் கட்டுப்பாடுகள் மற்றும் விசாரணையில் இருந்து மீண்டு வருவது அலிபாபா மிகப்பெரிய சவாலாகும்.

சீன அரசு அதிகாரிகள்

சீனா அதிகாரிகள் இந்த நடவடிக்கை அனைத்தும் அலிபாபாவின் ஆன்ட் குரூப் நிறுவனத்தை முறைப்படுத்த, எவ்விதமான வர்த்தகப் பாதிப்புகள் சக போட்டி நிறுவனங்களுக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக மட்டுமே எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்று வரையில் அலிபாபா நிறுவனத்திற்குப் பல்வேறு பிரச்சனைகளைச் சீன அரசு கொடுத்து வருகிறது.

ஜாக் மா பேச்சு

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கியக் காரணம் செப்டம்பர் மாத கடைசியில் ஷாப்காய் பகுதியில் நடத்த முக்கியமான பின்டெக் மாநாட்டில் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவருமான ஜாக் மா Global banking Basel Accords அமைப்பை வயதானவர்களின் கிளப் என்றும், சீனாவின் பைனான்சியல் எகோசிஸ்டம் என்பதே இல்லை என்று பேசினார்.

அடகுக் கடை

இதன் பின்பு சீனா வங்கிகள் ஒரு அடகுக் கடை போல் இயங்குகிறது. எப்போது உத்தரவாதம் துணை ஈடு ஆகியவற்றைக் கொண்டே செயல்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் வளர்ச்சி அடைய முடியாமல் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்று சீன அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

இதன் பின்பு தான் ஐபிஓ தடை, கட்டுப்பாடுகள், வர்த்தகப் பாதிப்பு எனப் பல்வேறு பிரச்சனைகள் துவங்கியுள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக