தொலைத் தொடர்பு துறையில் இருந்து வரும் கடுமையான போட்டியினால், கடந்த சில ஆண்டுகளாக போட்டி போட்டுக் கொண்டு சலுகையினை வழங்கி வந்தன. ஆனால் அதன் பின்னர் கடுமையான நஷ்டத்தினை சமாளிக்கும் விதமாக, கட்டணங்களை உயர்த்தினர். ஆனால் இவையாவும் கைகொடுக்காத நிலையில், தற்போது மேலும் தொழில் நுட்பங்களை புகுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதற்கு மத்தியில் வோடபோன் ஐடியா கூட்டணி ஏற்கனவே கடும் நிதி நெருக்கடி, கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் நிலையில், அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.
வோடபோன் நிறுவனத்திற்கு பின்னடைவு
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பலத்த பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், வோடபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் இணைந்தன. ஆனால் இதுவும் கைகொடுக்காமல் போகாமல் போகவே, பெருத்த நஷ்டத்தினை கண்டு வந்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் ஏஜிஆர் தீர்ப்பும் பேரிடியாக வந்தது.
முதலீட்டினை திரட்டும் வோடபோன்
இந்த பிரச்சனை மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வந்தாலும், வோடபோன் ஐடியாவிற்கு பெரும் அடியாகவே இருந்தது. ஏன் அந்த நேரத்தில் போதிய உதவி இல்லாவிட்டால் நிறுவனத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று வோடபோன் ஐடியா கூறியிருந்தது. எனினும் அதன் பிறகு சில சலுகைகளால் தற்போது புதிய முதலீட்டாளர்களை தேட ஆரம்பித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு 3 முதலீட்டாளர்கள் வோடபோனில், முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.
அதிகரிக்கும் போட்டி
இதற்கிடையில் ஏர்டெல் மற்றும் ஜியோ மத்தியிலான போட்டிகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அதிலும் வாடிக்கையாளர்கள் இணைப்பில் இவ்விரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு, லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்களை அதிகரித்து கொண்டு வருகின்றன. ஆனால் இதே காலகட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் லட்சக்கணக்கிலான வாடிக்கையாளர்களை இழந்து கொண்டே வருகின்றது.
வோடபோனின் மொத்த நிலவரம்
அக்டோபர் இறுதி நிலவரப்படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 406 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இதே பார்தி ஏர்டெல் நிறுவனம் 330 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனம் 293 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஆக வோடபோன் ஐடியா கொஞ்சம் கொஞ்சமாக தனது வாடிக்கையாளர்களை இழந்து வருவதனை இதன் மூலம் காண முடிகிறது.
வயர்லெஸ் பிராட்பேண்ட்டிலும் சரிவு தான்
இதே வயர்லெஸ் பிராட்பேண்ட் சந்தாவிலும் கூடுதலான வோடபோன் ஐடியா அதன் போட்டியாளர்களுக்கு பின்னாலேயே உள்ளது. ஏனெனில் பார்தி ஏர்டெல் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் 7 மில்லியன் வாடிக்கையாளர்களில் இருந்து, 170 மில்லியன் வாடிக்கையாளர்களாக அதிகரித்துள்ளது. இதெ ரிலையன்ஸ் ஜியோ 4 மில்லியனில் இருந்து 408 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதே வோடபோன் நிறுவனமொ ஒரு மில்லியனில் மூன்றில் இரண்டு பங்கினை மட்டுமே சேர்த்துள்ளது.
தொலைத் தொடர்பு சந்தை
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு சந்தையில் 35%மும், பார்தி ஏர்டெல் 29%மும், இதே வோடபோன் அடியா 25%மும் பங்கு வகித்து வருகின்றன.
ஒரு காலத்தில் பெரும் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக இருந்த வோடபோனுக்கு, இது பெருத்த அடி தான் என்றாலும், அடுத்த கட்டத்திற்கு செல்ல வோடபோன் முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஏற்கனவே நெருக்கடியில் இருந்து வரும் வோடபோன், எப்படி இந்த பிரச்சனையில் மீண்டு வரப்போகிறதோ தெரியவில்லை.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக