தொலைத் தொடர்பு நிறுவனங்களில் கொடி கட்டி பறந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், தங்களில் யார் பெஸ்ட் என்பதை நிரூபிக்க போட்டி போட்டுக் கொண்டு சலுகைளை வாரி வழங்குகின்றன.
தொலைத் தொடர்பு துறையில் நுழைந்த சிறிது காலத்திலேயே தனிக்காட்டு ராஜவாக வலம் வரும் ஜியோ, குறிப்பிட்ட காலத்திலேயே, கணிசமான வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது எனலாம்.
இதே மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஜியோவுக்கு இணையாக சேவைகளை வழங்கி வருகின்றன. எனினும் வழக்கப்போல அதிலும் ஜியோ டாப்பில் உள்ளது.
பட்ஜெட் திட்டங்கள்
இந்த இரு நிறுவனங்களுமே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி நன்மைகளையும் வழங்கி வருகின்றன.அதோடு பல பட்ஜெட் திட்டங்களையும் வழங்கி வருகின்றன. அவற்றை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அதில் இன்று நான் முதலாவதாக பார்க்கவிருப்பது ரிலையன்ஸ் ஜியோ தான்.
ரிலையன்ஸ் ஜியோவின் பட்ஜெட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது. ஜியோ 1,299 ரூபாய் மதிப்பிலான சலுகையை வழங்கி வருகின்றது. எனினும் இந்த திட்டத்தில் வேலிடிட்டியை 365 நாட்களில் இருந்து, 336 நாட்களாக குறைத்துள்ளது. இதில் ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும், ஜியோ - மற்ற நெட்வொர்க்களுக்கு 12,000 நிமிடங்களும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். அதோடு 3,600 மெசேஜ்களை இலவசமான பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ ஆஃப்ஸ், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சாவ்ன் உள்ளிட்டவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
ஏர்டெல் பட்ஜெட் திட்டங்கள்
ஜியோவில் உள்ளதைபோலவே ஏர்டெல்லிலும் ஒரு பட்ஜெட் திட்டம் உள்ளது. ஆனால் 1498 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இந்த திட்டத்தில் 24 ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டாக்களை பெற முடியும். இதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பெற முடியும். இதுதவிர 365 வேலிடிட்டியும், 3600 இலவச எஸ்எம்எஸ்-களையும் பெற முடியும். இது தவிர இந்த ரீசார்ஜ் பிளானில் எக்ஸ்ட் ரீம் ஆப் பிரீமியம், இலவச ஹலோடியூன், விங்க் மியூசிக் உள்ளிட்டவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
வோடபோன் ஐடியாஏர்டெல்லில் உள்ள பட்ஜெட் திட்டத்தினை போலவே, வோடபோன் ஐடியாவிலும் உள்ளது. வோடபோனில் 1499 24 ஜிபி டேட்டாவினை பெற முடியும். இதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை, எந்த நெட்வொர்க்கும் பெற முடியும். இந்த திட்டத்தில் 3600 இலவச எஸ்எம்எஸ்-களையும் பெற முடியும். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-லிலும் இதே போன்ற சலுகை உள்ளது.
ஆக மேற்கண்ட இந்த திட்டங்களுடன் ஒப்பிடும்போது ஒன்றுக்கு ஒன்று விடாமல், ஒவ்வொரு விதத்திலும் தாங்கள் சிறந்தவர் என காட்டிக் கொள்ள பல சலுகைகளை வாரி வழங்குகின்றன
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக