இத்தனை ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் ஜெய் வித்தியாசமான முயற்சியில் இறங்குகிறாராம்.
இசை குடும்பத்தை சேர்ந்த ஜெய் லண்டனில் முறைப்படி இசை பயின்று வந்தபோது விஜய்யின் பகவதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே நடிகர் ஆனார். அதில் இருந்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் . அண்மையில் தான் ஜெய் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார்.
சுசீந்திரன் இயக்கத்தில் ஹீரோவாக
நடித்துள்ளதுடன், இசையமைக்கவும் செய்துள்ளார். ஜெய் இசையமைப்பாளரானது அவரின்
பெரியப்பா தேவாவுக்கு ரொம்ப சந்தோஷமாம். இந்நிலையில் ஜெய் மேலும் ஒரு புது அவதாரம்
எடுக்கிறாராம்.
பத்ரி இயக்கத்தில் இயக்குநர் சுந்தர் சி. ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். சுந்தர்
சி. தயாரித்து ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் அவருக்கு வில்லனாக ஜெய்
நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாங்க ரொம்ப பிசி படம் மூலம் தான் பத்ரி
இயக்குநர் ஆனார். மாயா பஜார் 2016 கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கான நாங்க ரொம்ப
பிசியை சுந்தர் சி. தான் தயாரித்தார்.
பிரசன்னா, யோகி பாபு, ஷாம் உள்ளிட்டோர் நடித்த நாங்க ரொம்ப பிசி தியேட்டர்களில்
ரிலீஸாகாமல் தீபாவளி பண்டிகை அன்று நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது. அந்த
படத்தை அடுத்து தான் பத்ரி தன் முதல் பட தயாரிப்பாளரான சுந்தர் சி.யை ஹீரோவாக
வைத்து படம் எடுக்கிறார்.
ஜெய்க்கு காமெடி செய்ய நன்றாக வரும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில்
அவருக்கு வில்லன் கதாபாத்திரம் செட்டாகுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நினைத்துக் கூட பார்க்காத ஆட்கள் எல்லாம் வில்லனாக மாறி அசத்தும்போது ஜெய் முயற்சி
செய்வதில் தவறு இல்லை.
ஒரு இமேஜுக்குள் சிக்காமல் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கவே நடிகர்கள்,
நடிகைகள் விரும்புகிறார்கள். கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதபதி
சக ஹீரோக்களின் படங்களில் வில்லனாக அட்டகாசம் செய்து வருகிறார். வில்லனாக
நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் அவரின் இமேஜ் பாதிக்கப்படவில்லை. மாறாக அவரின்
வில்லத்தனத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக