----------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
----------------------------------------------------
கணவன் : இந்த பண்டிகைக்கு உனக்குப் பட்டுப் புடவை!
மனைவி : அப்படியா! எதை வெச்சி சொல்லுறீங்க?
கணவன் : உன் வளையலை வெச்சுத்தான் சொல்லுறேன்.
மனைவி : 😏😏
----------------------------------------------------
ரமேஷ் : இதோட எனக்கு பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே பிடிக்கல.
சுரேஷ் : உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணை பாக்க வேண்டியதுதானே?
ரமேஷ் : பாத்தோம். ஆனா எங்க அப்பாவுக்கு பிடிக்கல...!
சுரேஷ் : 😄😄
----------------------------------------------------
வார்த்தை விளையாட்டு...!!
----------------------------------------------------
குறிப்பு : இதில் இடமிருந்து வலமாக படித்தாலும், மேலிருந்து கீழாக படித்தாலும் ஒரே சொற்களே கிடைக்கும்...!!
கிரக பாதசாரம்ம___வி___மி
கிரக பாதசாரம்க___யி___லி
விடை கீழே உள்ளது.👇
----------------------------------------------------
தன்னம்பிக்கை வரிகள்...!!
----------------------------------------------------
சிறந்த வாழ்க்கை என்னும் உயர்ந்த நிலையை அடைய, முயற்சி என்னும் படிக்கட்டின் வழியே ஏறிச்சென்றால் தான் முடியும்.
நதிகள் பின்னோக்கிப் பாய்வதில்லை. நதி போல வாழுங்கள். கடந்த கால கசப்புகளை மறந்துவிடுங்கள்.
ஆனால் அவைகள் கற்றுத் தந்த பாடத்தை மட்டும் வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு, வரும் காலத்திற்கான பாதையை சிறப்பானதாக எடுத்துச் செல்லுங்கள்.
உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஓர் நாள் விதைகளாக மண்ணில் விழுந்தவையே.
உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நகர்த்துங்கள்.
மரணத்தை இறைவன் ரகசியமாய் வைத்திருப்பதால்தான் மனிதன் ஓரளவாவது மனிதாபிமானத்தோடு நடந்துகொள்கிறான்.
விடை :
1. மதகு
தவிடு
குடுமி
2. கரடி
ரயில்
டில்லி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக