👉 சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சூரியனுடன் சுக்கிரன் பகை என்ற நிலையில் நின்று அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி நாம் காண்போம்.
👉 செயல் அளவில் தைரியம் குறைந்தவர்கள்.
👉 எதிலும் அரைகுறையாக இருப்பார்கள். ஆனால், எனக்கு எல்லாம் தெரியும் என்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வார்கள்.
👉 எதையும் காலம் கடந்த பின் யோசித்து செயல்படக்கூடியவர்கள்.
👉 அலட்சியம் மற்றும் சுறுசுறுப்பில்லாத செயல்பாடுகளை உடையவர்கள்.
👉 உடன் பணிபுரிபவர்களுடன் சுமூகமான சூழல் இவர்களுக்கு இருக்காது.
👉 எதிலும் போராட்டமான சூழலையும், காரிய காலதாமதமும் உடையவர்கள்.
👉 உடல்பலம் குறைந்தவர்களாகவே இருப்பார்கள்.
👉 எதிலும் அவ்வளவு எளிதில் திருப்தியடைய மாட்டார்கள்.
👉 இவர்களுக்கு சங்கீதத்தில் ஆர்வம் இருக்கும். குரல் வளம் அமையப் பெற்றவர்கள்.
👉 தன்னை என்றும் உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.
👉 சில நேரங்களில் இவர்களின் ஆடம்பரச் செலவுகளால் கடனாளியாக மாறும் சூழல் உண்டாகும்.
👉 இறை நம்பிக்கை உடையவர்கள். பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யக்கூடியவர்கள்.
👉 அறுசுவை உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள். குறிப்பாக அசைவ உணவுகளை ரசித்து ருசித்து உண்ணக்கூடியவர்கள்.
👉 மற்றவர்கள் இடத்தில் இருக்கும் குறையை காண்பதில் வல்லவர்கள்.
👉 இன்பமாக வாழ விரும்பக்கூடியவர்கள். சிறு துன்பம் என்றாலும் புலம்பி தள்ளி விடுவார்கள்.
👉 தன்னை என்றுமே அலங்காரப்படுத்தி கொள்வதில் அலாதிய விருப்பம் உடையவர்கள்.
👉 இளைய சகோதரர்களை விட சகோதரிகளால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
👉 ஏற்ற, இறக்கமான இலாபங்களை கொண்ட தொழில் சூழலை உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக