Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 30 டிசம்பர், 2020

ஊட்டி ரயில் சேவை தொடக்கம்: கட்டணம் எவ்வளோ தெரியுமா?

 

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதையடுத்து இனி சாதாரண கட்டணமே வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை டிசம்பர் 31ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

யுனெஸ்கோ அந்தஸ்தோடு சேவை தொடக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள உதகைக்குச் செல்ல யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழக் கிழமை முதல் உதகை மலை ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளது.

கொரோனா காரணமாக பாதுகாப்பான பயணம்!

முகக் கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பயணிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதுவும் சாதரண கட்டணம்தானாம்!

கொரோனா காலத்திற்கு முன் வசூலிக்கப்பட்ட கட்டணமே இனி பெறப்படும் (சாதாரண கட்டணம்) என ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடையே கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த சூழலில், இப்போது கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போ ஊட்டியில் சூப்பர் கிளைமேட்!

தற்போது உதகையில் பனிமூட்டத்துடன் இதமான சூழல் நிலவி வருவதாலும், தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டைக் கொண்டாடும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டு நேரத்தில் மகிழ்ச்சியானச் செய்தி!

மலை ரயிலில் பயணம் செய்து கொண்டே உதகை நிலவும் இதமான சூழலை அனுபவிப்பது அலாதி சுகம். இதனால் உதகை மலை ரயில் உலகம் முழுவதும் பெயர் பெற்றுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக