தரமான அம்சங்களுடன் தாறுமாறான கேமாராக்களுடன் விவோ எக்ஸ் 60 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களான விவோ எக்ஸ் 60 மற்றும் விவோ எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அதிகாரபூர்வமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதே தொடரின் மூன்றாவது மற்றும் ஸ்னாப்டிராகன் 888 SoC ப்ராசஸர் கொண்ட விவோ எக்ஸ் 60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவோ எக்ஸ் 60 மற்றும் எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் பிரதான மற்றும் பொதுவான அம்சங்கள்:
விவோ எக்ஸ் 60 மற்றும் எக்ஸ் 60 ப்ரோ ஆகிய இரண்டுமே பின்புறத்தில் செவ்வக வடிவிலான கேமரா அமைப்பையும், முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பையும் கொண்டுள்ளன.
5 ஜி திறன் கொண்ட சாம்சங்கின் எக்ஸினோஸ் 1080 SoC-களால் இயக்கப்படும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்களில் இந்த .மாடல்களும் ஒன்றாகும்.
மேலும் விவோ எக்ஸ் 60 மற்றும் எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் FHD + டிஸ்ப்ளே, ZEISS ஆப்டிகல் லென்ஸ், 48MP முதன்மை கேமரா, 4,300mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பொதுவான அம்சங்களை பகிர்ந்துகொள்கின்றன.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன? இவைகளின் விலைகள் என்ன? மற்ற அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.
விவோ எக்ஸ் 60 மற்றும் விவோ எக்ஸ் 60 ப்ரோ விலைகள்:
சீனாவில் விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.39,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்கள் ஆனது முறையே ரூ.42,700 மற்றும் ரூ.45,000 க்கு அறிமுகமாகி உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் வாங்க கிடைக்கும்.
விவோ எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் சிங்கிள் ஸ்டோரேஜ் விருப்பத்தை மட்டுமே கொண்டுள்ளது: அது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆகும். இதன் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.50,500 ஆகும்.
இது கருப்பு மற்றும் நீல வண்ணங்களில் வாங்க கிடைக்கும்.
விவோ எக்ஸ் 60 மற்றும் எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சீன விற்பனை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விவோ எக்ஸ் 60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்கிற தகவல் எதுவும் இல்லை
விவோ எக்ஸ் 60 ப்ரோ: டிஸ்பிளே, ஓஎஸ், ப்ராசஸர், ஸ்டோரேஜ், பேட்டரி:
விவோ எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளேவை FHD + ரெசல்யூஷன், 19.8: 9 அளவிலான திரை விகிதம், எச்டிஆர் 10 + மற்றும் பி 3 வண்ண வரம்பு மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதத்துடன் கொண்டுள்ளது. மேலும் செல்பீ கேமராவிற்காக டிஸ்பிளேவின் மேல்பக்க நடுப்பகுதியில் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.
ஹூட்டின் கீழ், இது 5nm எக்ஸினோஸ் 1080 SoC உடனாக 12GB LPPRD4x RAM + 256GB UFS 3.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய நிறுவனத்தின் சொந்த ஒரிஜின்ஓஎஸ் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 (அவுட் ஆப் பாக்ஸ்) கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,300 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வழங்குகிறது
விவோ எக்ஸ் 60 ப்ரோ: ரியர் கேமரா, செல்பீ கேமரா, சென்சார்ஸ், கனெக்டிவிட்டீஸ்:
Vivo X60 Pro ஸ்மார்ட்போன் ஆனது குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. quad-camerஅதில் 48MP (f/1.48) சோனி IMX598 முதன்மை சென்சார் + 8MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் (5x ஆப்டிகல் ஸூம் மற்றும் 60x டிஜிட்டல் ஸூம்) + 13MP அளவிலான 120-டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ் + 50mm focal length மற்றும் போர்ட்ரெயிட் லென்ஸ் கொண்ட 13MP கேமரா ஆகியவைகள் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இரண்டாம்-ஜென் மைக்ரோ-கிம்பல் OIS தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது இடைநிலை OISஐ விட மூன்று மடங்கு சிறந்தது என்று கூறப்படுகிறது.
முன்பக்கத்தை பொறுத்தவரை, இது செல்பீ மற்றும் வீடியோ அழைப்பிற்காக 32 எம்பி கேமராவை பேக் செய்கிறது. பாதுகாப்பிற்காக இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, விவோ 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் ஆதரவு, 5 ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.1, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:
விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அதன் ப்ரோ மாடலைப் போலவே இருக்கின்றன. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகித டிஸ்பிளே, எக்ஸினோஸ் 1080 SoC ப்ராசஸர், 32MP செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவைகளை கொண்டுள்ளது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் ப்ரோ மாடலை போல் இல்லாமல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. ப்ரோ மாடலில் உள்ள பிரத்யேக டெலிஃபோட்டோ லென்ஸ் இதில் இருக்காது. மேலும் விவோ எக்ஸ் 60 ப்ரோவில் 4,200 எம்ஏஎச் பேட்டரி உள்ளது, ஆனால் இதில் சற்றே பெரிய 4,300 எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்படுகிறது.
மொபைல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக