----------------------------------------------
படிங்க சிரிங்க...!
-----------------------------------------------
ஆசிரியர் : சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன் : சுமார் ஒரு ஆறு மாதம் வித்தியாசம் சார்...
ஆசிரியர் : 😐😐
-----------------------------------------------
கோவிந்தன் : டாக்டர், நான் போதைல தெரியாம ஒரு எலியை உசுரோட முழுங்கிட்டேன். என்னை காப்பாத்துங்க!
டாக்டர் : இந்தாங்க, இந்த எலிமருந்தை சாப்பிடுங்க. எலி செத்திடும். அப்புறம் ஈசியா வெளியில் எடுத்திடலாம்!
கோவிந்தன் : 😐😐
-----------------------------------------------
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி : ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்?
டாக்டர் : இது அவருக்கில்லை... உங்களுக்கு..!!
மனைவி : 😠😠
-----------------------------------------------
விடுகதைகள்...!
-----------------------------------------------
1. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது. அது என்ன?
2. முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து. கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை. மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை. அது என்ன?
3. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன். அவன் யார்?
4. நிலத்தில் முளைக்காத செடி, நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன?
5. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான். அது என்ன?
6. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
விடை :
1. கண்கள்
2. ஆபத்து
3. மஞ்சள்
4. தலை முடி
5. பணியாரம்
6. பென்சில்.
-----------------------------------------------
சொல் விளையாட்டு...!
-----------------------------------------------
இதில் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் நிரப்புக. இரண்டும் ஒரே எழுத்து.
_ளை_
_டிபு_
_றுக்_
_டைப்_
_றுக்_
விடை :
விளைவி
குடிபுகு
குறுக்கு
புடைப்பு
கிறுக்கி
-----------------------------------------------
இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!
-----------------------------------------------
அவனும் அவளும் அவலும் தௌ;ளு மாவும் தின்றார்கள்.
வில்லேருழவர் பகை கொளினும் சொல்லேருழவர் பகை கொள்ளற்க.
களையெடாதவன் விளைவெடான்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக