Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 டிசம்பர், 2020

டாடா மோட்டார்ஸின் அதிரடி.. மார்கோபோலோவின் முழு பங்கினையும் வாங்க திட்டம்..!

 டாடா மோட்டார்ஸ் முழு உரிமையாளராக மாறும்

இந்தியாவின் டாடா மோட்டார்ஸூம், பிரேசில் நாட்டை சேர்ந்த மார்கோபோலோ நிறுவனமும் இணைந்து இந்த தொழிற்சாலையை அமைத்திருக்கின்றன. இதில் 51 சதவீத பங்குகள் டாடா மோட்டார்ஸூக்கு இருக்கிறது.

இந்த நிலையில் கூட்டாளரான மார்கோபோலோ நிறுவனத்தின் 49 சதவீதம் பங்குகளை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த பங்கினை 99.96 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் முழு உரிமையாளராக மாறும்

டாடா மோட்டார்ஸ் மற்றும் மார்கோபோலோ எஸ் ஏ ஆகிய இரு நிறுவனங்களும் இந்த பங்கு விற்பனை ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மார்கோபோலோ மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து, பங்குகளை வாங்கிய பின்னர், டாடா மோட்டார்ஸ் மார்கோபோலோ லிமிடெட் நிறுவனத்தின் முழு உரிமையாளராக மாறும்.

எப்போது ஒப்பந்தம் முடியும்

மேலும் டாடா மோட்டார்ஸ் மற்றும் மார்கோபோலோ நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் பிப்ரவரி 28, 2021-க்குள் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட டாடா மார்கோபோலோ மோட்டார்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன நிறுவனமாகும். உலகின் மிகப்பெரிய பஸ் உற்பத்தியாளர்களில் ஒருவராகும்.

பஸ் தயாரிப்பு

டெல்லி, மும்பை மற்றும் பிற பெரும் நகரங்களில் பொது போக்குவரத்துக்காக குறைந்த மாடி பயணிகள் பேருந்தை அறிமுகப்படுத்தியது டாடா மார்கோபோலோ மோட்டார்ஸ் நிறுவனமும் ஒருவர். இந்த கூட்டணி நிறுவனங்கள் லக்னோ மற்றும் கர்நாடாகவின் உள்ள தார்வாட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ் பிரிவுகளில் பேருந்துகளை உற்பத்தி செய்து வந்தது.

லாபம் இது தான்

இந்த வாகனங்கள் டாடா மோட்டார்ஸின் கீழ் உள்ள ஸ்டார்பஸ் மற்றும் ஸ்டார்பஸ் அல்ட்ரா பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றது. ஆக இப்படியொரு வெற்றிகரமான கூட்டணி தான் டாடா மோட்டார்ஸிம், மார்கோபோலோவும். இந்த நிலையில் டாடா மார்கோபோலோவின் வருவாய் மற்றும் வரிக்கு பிந்தைய லாபம் முறையே 651 கோடி ரூபாய், 21 கோடி ரூபாயாகவும் உள்ளது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக