புதிய யமஹா ஆர்3 பைக் ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இதன் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
2021 மாடலாக வர இருக்கும் புதிய யமஹா ஆர்3 பைக் புதிய வண்ணத் தேர்வுகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. கருப்பு - சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணக் கலவைகளுடன் சையன் வண்ணத்த தேர்வு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட அலாய் வீல்கள் உள்ளன. இந்த வண்ணத் தேர்வு வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருக்கும்.
சையன் வண்ணத் தேர்வு தவிர்த்து, புதிய ஆர்3 பைக் மேட் டார்க் க்ரே மற்றும் பர்பபுள் புளூ மெட்டாலிக் ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய யமஹா ஆர்3 பைக்கில் முழுமையான ஃபேரிங் பேனல்களுடன் அசத்துகிறது. இந்த பைக்கில் ஸ்டெப்டு அப் இருக்கை அமைப்பு, க்ளிப் ஆன் ஹேண்டில்பார், உயர்த்தப்பட்ட விண்ட்ஷீல்டு அமைப்பு ஆகியவை உள்ளன.
எல்இடி ஹெட்லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சைலென்சர் உயர்த்தப்பட்ட அமைப்புடன் இருப்பதும் தனித்துவமான விஷயமாக கூறலாம். இந்த பைக்கில் டேங்க் பேடு, ஸ்பெஷல் விண்ட்ஷீல்டு போன்றவை ஆப்ஷனலாகவும் வழங்கப்படும்.
புதிய யமஹா ஆர்3 பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 320சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 41.5 எச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய யமஹா ஆர்3 பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெறுகிறது.
முன்புறத்தில் இன்வெர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.
புதிய யமஹா ஆர்3 பைக் வரும் ஜனவரி 15ந் தேதி ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது. அங்கு 6,87,500 யென் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.4.80 லட்சமாக விலை இருக்கும். இந்த பைக் தற்போது பிஎஸ்-6 தரத்திற்கு இணையான எஞ்சினை பெற்றுள்ளதால், அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவிலும் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக