Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 டிசம்பர், 2020

அனைத்து ரேஷன் அட்டைக்கும் பொங்கல் பரிசுடன் பால் பவுடர்... ஆவின் கோரிக்கை

 Aavin | Aavin Madurai | Milk Powder

சேலம் ஆவின் நிறுவனத்தில் 18000 டன் பால் பவுடர் தேங்கியுள்ளது. அவை காலாவதி ஆவதற்கு முன்பு ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்க கோரிக்கை

கொரானா காலத்தில் ஆவின் மூலம் நாள் ஒன்றுக்கு 28 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆவின் நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பாலை வாங்கி வருகிறது. இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் அனைத்து பாலையும் வாங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மாநில அளவில் நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் என்றும் அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

ஆவின் நிறுவனத்தில் பத்தாயிரம் டன் பால் பவுடர் தேக்கம் அடைந்துள்ளது கொள்முதல் செய்யும் பாலை பவுடராக உருமாற்றம் செய்யும் போது உறுப்பினர்கள் வழங்கும் பால் பணம் பட்டுவாடா நிலுவையில் ஏற்பட்டுள்ளது. ஆகவே தேக்கமடைந்து உள்ள பால் பவுடரை காலாவதி ஆவதற்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ வழங்க வேண்டும்.

முன்னதாக மதுரை ஆவின் சார்பில் 9 மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் நெய் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும் கொரானா நிதியிலிருந்து வழங்குவதின் மூலம் நிலுவை இல்லாமல் உறுப்பினர்களுக்கு பால் பணம் பட்டுவாடா செய்ய முடியுமென பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அரசு தங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் பெரும் இழப்பை தவிர்க்கலாம் என்றும் அவர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக