Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 டிசம்பர், 2020

அலுவலகத்தினை துவம்சம் செய்த ஊழியர்கள்.. பணியமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்..!

 அலுவகத்தினை துவம்சம் செய்த ஊழியர்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்த ஆலை தைவான் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஸ்மார்ட்போன் பாகங்கள், IOT மற்றும் பயோடெக் சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனத்தில் சமீபத்தில் நிறுவனம் சம்பளம் தராமல் தாமதப்படுத்தி வருவதாகவும், குறைவான சம்பளம், ஓடிக்கு சரியான சம்பளம் வழங்கப்படவில்லை, ஏஜென்சி நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்வைத்து போராட்டம் வெடித்தது. இதில் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

அலுவகத்தினை துவம்சம் செய்த ஊழியர்கள்

சம்பள பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகளுக்கான இரவு பணிக்கு வந்த ஊழியர்கள் பணியை முடித்தவுடன், தொழிற்சாலையை அடித்து நொறுக்கியதாகவும், இதன் காரணமாக பல உபகரணங்கள், உற்பத்தி இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கட்டைகளைக் கொண்டு தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதனால் விஸ்ட்ரான் நிறுவத்திற்கு பல கோடி நஷ்டம் என்றும் அந்த நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.

பதற்றமான சூழல்

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து காலை 5.45 மணியளவில் நிறுவனத்தை அடித்து நொறுக்கியதில் அந்த இடமே பதற்றமான ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதுபற்றி அறிந்த கோலார் மாவட்டத்தில் இருந்து போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதுமட்டும் அல்ல இந்த சம்பவம் தொடர்பாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

சம்பள பிரச்சனை

அதில் அந்நிறுவன ஊழியர்கள் கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள், கார்கள், அதிகாரிகளின் அறைகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதன் பின்னணி காரணம் குறித்து விசாரிக்கையில், ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் குறித்த சம்பளத்தை வழங்காமல் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகவும் தெரிய வந்தது.

குறைந்த சம்பளம் தான்

அதுமட்டும் அல்ல பொறியியல் படித்த பட்டதாரிக்கு மாதம் 21,000 ரூபாய் சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால் அதிலும் பிடித்தம் செய்து வெறும் 16,000 ரூபாய் மட்டுமே வழங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அந்த குறைந்த சம்பளத்தினையும் கடந்த சில மாதங்களில் 12,000 ரூபாயாக குறைத்துள்ளதாக தெரிகிறது.

வெறும் ரூ.5000 தான் கணக்கில்

அதோடு பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கு மாதச் சம்பளமாக 11,000 ரூபாய் சம்பளம் என்ற கூறி சேர்த்து, வெறும் 5,000 ரூபாய் மட்டுமே வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதன் காரணமாகத் தான் ஊழியர்கள் இப்போராட்டத்தினை கையில் எடுத்ததாகவும் கூறப்பட்டது.

ஓடி பிரச்சனை

அது மட்டும் ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்துள்ளனர். ஆனால் அதிக நேரம் வேலை செய்ததற்காக எந்த ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆக அதிலும் நிர்வாகத்துடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

மோசமான உணவு வசதி

அதுமட்டும் அல்ல ஊழியர்களுக்கு அங்கு வழங்கப்பட்ட உணவும் மிக மோசம் என ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு வேலை செய்யும் பெரும்பாலான ஊழியர்கள் முதலி ஒப்பந்த அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த ஊழியர்களில் பலர் ஹெச்ஆர் அலுவலர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

ஏஜென்சி மூலம் பணியமர்த்தல்

அதுமட்டும் அல்ல இங்கு பணியில் அமர்த்தப்படும் ஊழியர்கள், ஆறு ஏஜென்சி நிறுவனங்கள் மூலம் பணி அமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஸ்ட் ரான் நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களாகவே பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் முதல் மூன்று முதல் நான் கு மாதங்கள் வரை சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் தெரிகிறது. இதனால் நிர்வாகத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

கடும் அபராதம் விதிக்க வேண்டும்

ஆனால் எதுவும் கைகொடுக்காத நிலையிலேயே ஊழியர்கள் இப்போராட்டத்தினையே நடத்தியுள்ளனர். ஆனால் இதற்கிடையில் இந்த போராட்டத்தின் காரணமாக நிர்வாகத்திற்கு 400 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் என்றும் கூறியது. அதோடு சேதம் உட்பட தங்களுக்கு 437.70 கோடி இழப்பு என்றும் கூறியது. இதற்கிடையில் விஸ்ட் ரான் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் அனுப்பிய ஆறு ஏஜென்சி நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

ஆறு நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

அதோடு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தவறிய காரணங்களுக்காக இந்த நிறுவனங்களை தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆறு நிறுவனங்களும் தடை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விஸ்ட்ரான் நிறுவனத்தில் நடந்துள்ள போராட்டம் முதலீடு செய்வோருக்கு அச்ச உணர்வு ஏற்படுத்தும் என்று கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக சபை மற்றும் கர்நாடக மாநில சிறு தொழிற்சாலை உரிமையாளர் சங்க தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மீண்டும் இயங்குமா?

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வேம்கல் போலீசார், 149 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக விஸ்ட்ரான் தொழிற்சாலை மீண்டும் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தொழிற்சாலை மூடப்பட்டால், அதில் பணியாற்றி வரும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கலவரம் தொடர்பாக விஸ்ட்ரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக