இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாம்சங் நிறுவனம் தரப்பிலிருந்து அடுத்த ஆண்டு முதல் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யாது என்பது போன்ற செய்திகள் எல்லாம் சமீபத்தில் பரவலாக பகிரப்பட்டு வந்தது. அதேபோல், நோட் சீரிஸ் மாடல்களில் பிரபல அம்சமான எஸ் பென் அம்சம், கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
இது தொடர்பாக சாம்சங் நிறுவனம் அதன் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இதில், கேலக்ஸி நோட் சீரிஸ் பற்றி வெளியான தகவல்க முற்றிலும் வதந்தி என்றும், அடுத்து வரும் ஆண்டில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போன் மாடல் வெளியிடப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சாம்சங் மொபைல் பிரிவின் தலைவர் ரோ டே மூன் கூறுகையில், சாம்சங்கின் ''எஸ் பென் ஸ்டைலஸ்'' அனுபவம் வரும் ஆண்டில் இன்னும் சில கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் சேர்க்கப்படவுள்ளது என்றும், இதற்கான திட்டத்தை நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேலக்ஸி நோட் சீரிஸ் அம்சங்களில் அதிகம் விரும்பப்பட்ட அம்சங்கள் இனி கேலக்ஸி சாதனங்களிலும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் எஸ் பென் ஸ்டைலஸ் அடுத்து வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கூட வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு 2021, ஜனவரியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக