வாட்ஸ்அப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலி மூலம் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் சேவை
இந்நிலையில் மிகவும் எதிர்பார்த்த ஒரு அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் நிறுவனம். அது வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் ஆகும், இது ஆப்பின் வழியாக பணம் அனுப்ப உங்களை அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.
அனைவருக்குமான அம்சமாக மாறிய வாட்ஸ்அப் பே
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டின் துவகத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுடன் நாட்டில் அதன் கட்டண சேவையை சோதிக்கத் தொடங்கியது. இப்போது அனைவருக்குமான ஒரு அம்சமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் அப்டேட் செய்ய வேண்டும்
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் அணுக கிடைக்கிறது. உங்களுக்கு இது இன்னமும் கிடைக்காத பட்சத்தில் வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை நீங்கள் நிறுவலாம், அதன்பின்பு முயற்சி செய்யலாம்.
160-க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகள்
குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் 160-க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் பரிவர்தனைகளை இயக்க Unified Payment Interface (UPI) ஐ பயன்படுத்தி National Payments Corporation of India (NPCI) உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிராந்திய மொழிகளுக்கான அணுகல்
மேலும் இந்த புதிய வாட்ஸ்அப் சேவை 10 இந்திய பிராந்திய மொழிகளில் அணுக கிடைக்கிறது. இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த உங்களுக்கு தேவையானது யுபிஐக்கு ஆதரவளிக்கும் வங்கியின் டெபிட் கார்ட்கள் ஆகும்.
சேவையை விரிவுப்படுத்த திட்டம்
இந்த நிலையில் வாட்ஸ்அப் பே சேவையை நாட்டில் விரிவுப்படுத்த இந்தியாவில் நான்கு வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் வாட்ஸ்அப் பே நோக்கத்தை விரிவுப்படுத்த நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி என நான்கு வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
நான்கு வங்கிகளின் பட்டியல்
வாட்ஸ்அப் பயனர்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கணக்குகள் மூலம் வாட்ஸ்அப் பே அம்சத்தை பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
வங்கிகளுடன் கூட்டு சேர்வதில் மகிழ்ச்சி
இதுகுறித்து இந்திய வாட்ஸ்அப் நிறுவன தலைவர் அபிஜித் போஸ் கூறியதாவது, இந்தியா முழுவதும் இருக்கும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளுடன் கூட்டு சேர்வதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக