இறைவர் திருப்பெயர் : செந்நெறியப்பர்,
சாரபரமேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஞானாம்பிகை, ஞானவல்லி
தல மரம் : மாவிலங்கை
தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்
வழிபட்டோர் : மார்க்கண்டேயர், சூரியன்,தௌமிய முனிவர்
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
தல வரலாறு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார்.
இங்குள்ள பைரவருக்கு அப்பர் தனியாக தேவார பாடல் பாடியுள்ளார்.
கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு.
இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி
துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது
சிறப்பாகும்.
இங்கு தலவிருட்சமான மாவிலங்கை
வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை
வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி
காணப்படும்.
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம்
இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது
ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில்
ஒரு
லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக
விளங்கக்கூடிய
ரிணவிமோசன லிங்கேஸ்வரர்.
ஒருவர் பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும்,
கல்வியுடையவராகவும் இருந்தாலும் வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க
முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான
வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
சூரிய பூஜை : தக்கன் யாகத்தில் தான் செய்த தவறுக்கு கழுவாய் தேடி, சூரியன்
பல இடங்களிலும், இறைவனை வழிபட்டான் அவ்வாறு சூரியன் பூஜித்த ஸ்தலங்களுள் ஸ்ரீ
சாரபரமேஸ்வரர் ஸ்தலமும் ஒன்றாகும் என்பது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும்.
திருச்சேறையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான சாரநாதப் பெருமாள் ஆலயமும் உள்ளது.
கோவிலின் அமைப்பு:
இவ்வாலயம் கிழக்கு நோக்கிய அமைப்புடையது. சிறிய ராஜகோபுரம் வழியாக உள்ளே
நுழைந்தவுடன் முதல் பிரகாரத்தில் அலங்கார மண்டபம் உள்ளது. இந்த வெளிப்
பிரகாரத்தில் இறைவன் செந்நெறியப்பர் எனும் சாரபரமேஸ்வரர் சந்நிதிக்கு இடப்புறம்
இறைவி ஞானாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது.
வெளிப் பிரகாரத்திலிருந்து உட்பிரகாரம் சென்றவுடன் கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி
உள்ளது. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கருவறையைச் சுற்றி உள்ள பிரகாரத்தில் மேற்குப் பிரகாரத்தில் தல விநாயகரும்
அவரையடுத்து மார்க்கண்டேயரும் அடுத்து அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய
முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் உள்ளது.
இதையடுத்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சந்நிதியும் பாங்குற அமைந்துள்ளது. மற்ற எங்கும்
இல்லாத சிறப்பு அம்சம் இத்தலத்தில் மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை,
விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில்
இத்தலத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில்
துர்க்கைகளை வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும். மேலும் நடராஜப் பெருமான்
சந்நிதியும் அதன் அருகில் ஸ்ரீ பைரவர் சந்நிதியும் உள்ளது.
சிறப்புக்கள் :
கடன், பிணி தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.பிரார்த்தனை
நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும்
நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பொருள் வசதி படைத்தோர் அன்னதானம் செய்தும்,
திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
போன்: -
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச்சியார்கோவில்
வழியாக குடவாசல் செல்லும் சாலையில் 10 கி.மி. தொலைவில் திருச்சேறை சிவஸ்தலம்
இருக்கிறது. குடவாசலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து
வலங்கைமான் வழியாகவும் திருச்சேறை தலத்தை அடையலாம்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல்
இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இத்தலத்தில்
மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை
என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில் இத்தலத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும்.
கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக